'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அரசாங்கத்தை நிறுத்தவேண்டும்' - சரத் பொன்சேகா.
'நாட்டைக்காட்டிக்கொடுக்கும் துரோகிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்'. - அமைச்சர்கள்(வீரகேசரி)
செய்தி
செய்திக்கு
'இலங்கையின் சிறுபான்மையினர் இந்நாட்டின் விருந்தாளிகள் மட்டுமே' என்று சரத் பொன்சேகா ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருவார் என்ற எதிர்பார்ப்பு தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. - எம். எம். சுஹைர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியும்.(தினகரன்)
செய்தி
- சிறுபான்மையினர் சார்பாக முன்னாள் ஜனாதிபதி டி.பி விஜயதுங்க(1993) கூறிய கருத்தானது 'சிறுபான்மையினர் பெருமரத்தை சுற்றிவளரும் கொடி' என்பதை நினைவுக்குட்படுத்தவும் . காலத்துக்கு காலம் சிறுபான்மையினரைப் பற்றிய தரக்குறைவான அபிப்பிராயங்களை தெரிவிப்பதில் சிங்களத்தலைவர்கள் முந்திக்கொள்வார்கள். சரத் பொன்சேகாவின் கருத்துக்கு துள்ளிக்குதிக்கும் சுஹைர் ஐயாவே, மஹிந்த கொம்பனியின் கோத்தபாய ராஜபக்ச கூறிய 'தமிழ் ஆண்கள் கடலுக்கும் தமிழ் பெண்களை சிங்கள இராணுவத்திற்கும் வழங்கவேண்டும்' என்ற கருத்து சார்பாக நீங்கள் மௌனம் சாதிப்பது ஏன்? ஒருவேளை அது தமிழ் மக்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதாலோ?
செய்திக்கு
சரத் பொன்சேகாவை அரசாங்கம் சர்வாதிகாரியாக சித்தரிக்க முயல்கிறது(வீரகேசரி)
செய்தி
சோமவன்ச அவர்களே! எவரும் அவரை சர்வாதிகாரியாக சித்தரிக்க வேண்டிய தேவை இல்லை. அவர் சர்வாதிகாரி என்பதை அனைவரும் அறிவார்கள். உங்களுக்கு இது புதிய விடயமாக இருக்கலாம். இனியாவது சொந்த நாட்டில் தங்கியிருங்கள்.
செய்திக்கு
|
அமைச்சர் முரளிதரனுக்கு வழங்கப்பட்ட பதவி எஸ்.பிக்கும் வழங்கப்படவுள்ளது. (தமிழ்வின்)
செய்தி |
ஐயா SP அவர்களே பிரதமர் பதவியும் அமைச்சர் பதவியும் ஹவுஸ்புல்.
ஒருபோதும் உபதலைவர் பதவி 'ஹவுஸ்புல்' ஆகாது. நம்பிவரலாம்.
செய்திக்கு
'இலங்கையின் கிழக்குப்பகுதியில் புதிய போராட்டக்குழு (மக்கள் விடுதலை இராணுவம்) உருவாக்கம்.(தி டைம்ஸ்)
செய்தி
செய்திக்கு
'தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிமூலங்களில், ஆயுதக்கொள்வனவில் பிரபாகரன் வாழ்கிறார்'(தி டைம்ஸ்)
செய்தி
செய்திக்கு....
'ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம். அண்மையில் சுவிசில் நடைபெற்ற கருத்தரங்கமர்வில் பலவிடயங்களை ஆணித்தரமாக கூறியுள்ளேன். - மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன்.(வீரகேசரி)
செய்தி
ஐயா! நீங்கள் எப்போதாவது நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியதுண்டா? இப்படிச்சொல்லிச்சொல்லியே காலத்தை கடத்திவிட்டீர்கள். இது கூறவா நீங்கள் சுவிஸ் கருத்தரங்கிற்கு சென்றீர்கள்? - பாவம் மக்கள்.
செய்திக்கு.....
'ஆட்சிக்கு வந்ததும் ஊழல்மோசடியில் ஈடுபட்டவர்களை மக்கள் முன் நிறுத்துவேன்' - சரத் பொன்சேகா(வீரகேசரி)
செய்தி
இராணுவ தளபதியாக பன்னெடுங்காலமாக பணியாற்றிய நீங்கள் உட்பட, உங்களின் கட்டளைக்கு கீழுள்ள இராணுவவீரர்கள் அடங்கலாக இதுவரை காலமும் தமிழ்மக்களுக்கு செய்த நெருக்குவாரங்களை எந்த ஊழல்மோசடியின் கீழ் மக்கள்முன் நிறுத்த போகிறீர்கள்?
செய்திக்கு....
'மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெயர்ந்த மக்கள் அங்குள்ள அரச காணியில் குடியேறலாம்' - அமைச்சர் முரளீதரன்(கருணா)(வீரகேசரி)
செய்தி
ஐயா! சம்பூர், கடற்கரைச்சேனை, சூடைக்குடா, கூனித்தீவு போன்ற பகுதிகள் இதுவரை மீள்குடியேற்றப்படாமல் உள்ளதால் அவர்களை அரச காணியில் குடியேற சொல்வீர்களோ? அரச காணியில் குடியேறலாம் என்ற அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது? இலங்கையின் அமைச்சராக இருக்கும் நீங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் உயர்நீதிமன்ற அனுமதியின் பின்னும் இதுவரை சொந்த இடங்களில் குடியேற்றப்படாமல் 6963 பேர் 67 நலன்புரி நிலையத்திலிருப்பதையும் 21 பாடசாலைகள் இயங்காமல் இருப்பதையும் 9 பாடசாலை வேறொரு இடத்தில் இருப்பதையும் 16 பாடசாலைகள் பாதுகாப்பு வலயத்துள் இருப்பதையும் அறிவீர்களா? இவர்களையும் வலிகாமத்தில் அரச காணி இல்லாத நிலையில் எங்கு கொண்டு குடியேற்றுவதாக உத்தேசம்.
செய்திக்கு
'இலங்கையில் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு படைத்தளபதிகளே காரணமாக இருந்தனர்' - கோத்தபாய(தமிழ்வின்)
செய்தி
படைத்தளபதியே காரணமென்றால், அவர்களுக்கான உத்தரவை வழங்கும் பாதுகாப்பு செயலாளரான உங்களிற்கு பங்கு இல்லையா?
செய்திக்கு....
'புலிகள் தோற்கடிக்கப்பட்டத்தை விரும்பாத மேற்குலக சக்திகள் ஜனாதிபதிக்கெதிராக சூழ்ச்சி'. - கோத்தபாய ராஜபக்ச(வீரகேசரி)
செய்தி
மனிதநேயத்தை நேசிக்கும் மேற்குலகம் உங்கள் சகோதனுக்கு மட்டும் எதிரியல்ல உங்களுக்கும்தான். ஏனென்றால், தமிழ் ஆண்களை சமுத்திரத்திலும் தமிழ் பெண்களை உங்கள் இராணுவத்துக்கும் வழங்கவேண்டும் என கூறிய பௌத்த காருண்ணியம் மிக்கவரல்லவா நீங்கள்?