தணல் இணைப்புகள்


  
|
செய்திக்கு
வடக்கு-கிழக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வே தேவையற்றது என அரசாங்கம் எண்ணுகிறது'
ஐக்கியதேசிய கட்சிக்கு மாறிய இலங்கை தொளிலாளர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஜோகராஜன் கூறுகிறார்.
செய்தி
- 'தானாடாவிட்டாலும் தன் தசையாடும்' என்று பாராளுமன்றத்தில் என்றோ அமரர் செளன்யமூர்த்தி தொண்டமான்
- அவர்கள் கூறியது நினைவில் நின்று கிளர்ந்தெழுகிறது.
செய்திக்கு
திருக்கோணமலை நகரசபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் சபைத்தலைவருடன் உறுப்பினர்கள் வாக்குவாதம். ஆளும்கட்சி உறுப்பினர் சபைத்தலைவரின் உத்தரவின் பெயரில் உறுப்பினர் ஒருவர் போலீசாரால் வெளியேற்றப்பட்டார். இதனை ஆட்சேபித்து செல்வராஜா, கரிகாலன்
வெளியேறினார்கள்.(வீரகேசரி)
செய்தி
- நியாயம் கேட்டதற்கு போலீசாரை ஏவிவிட்ட தலைவா எதிர்காலத்தில் மக்கள் ஏவுகின்ற கணைகளை எப்பிடித் தாங்கப்போகின்றீர்கள்? உங்களின் பேரினவாதிகளின் கூட்டு இதற்கு மேலேயும் செய்யச்சொல்லும்.
செய்திக்கு
'முஸ்லீம் காங்கிரஸ்' கலிமாவைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லீம் காங்கிரஸ் யாருக்கும் அடகு வைக்கவில்லை. மகிந்த ராஜபக்சவை சகல மதங்களையும் சேர்ந்தவர்களும் அவரை ஆதரிக்கிறார்கள் - ஜனாதிபதி ஆலோசகரும், ஊடக ஆலாச்சி அதிகாரியான அல்ஹாஜ் அஸ்வர்(வீரகேசரி)
செய்தி
- 'கலிமா' வை கொண்டும் 'ஹதீஸைக்' கொண்டும் ஆரம்பிக்கப்பட்ட 'முஸ்லீம் காங்கிரஸ்' பலாத்காரமாக பள்ளிவாசலைக் கட்டவில்லை. பௌத்த தர்மத்தை அடித்தளமாகக் கொண்ட மகிந்த அரசு இலங்கையின் முதல் துறைமுகமான இலங்கைத் துறைமுகத்துவாரம் (திருக்கோணமலை மாவட்டம்) உட்பட பல தமிழர் பிரதேசங்களில் பலவந்தமாக பௌத்த விகாரை அமைத்திருப்பதைப்பற்றி அஸ்வர் அவர்களே என்ன சொல்கிறீர்கள்? முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மொழிபெயர்ப்பாளர். இந்நாளில் மகிந்தவின் ஊடக ஆலாச்சி(ஆராத்தி) அதிகாரியல்லவா? இப்படி விலைபோனால் அப்படித்தான் பேசவேண்டும்.
செய்திக்கு
சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் 6 நிமிடத்தில் இராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்துவார் - ரிஷாத் பதியுதீன்(Dan TV)
செய்தி
- இலங்கையில் இராணுவ ஆட்சியை எவரும் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஏன், அமைச்சரே! அமைச்சர் பாயிஸ் புத்தளத்தில் மக்கள் மத்தியில் உங்களுக்கு அடித்ததும், கைத்துப்பாக்கியால் மிரட்டியதும், அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை என நீங்கள் ஓலமிட்டதும், உங்களின் ரட்சகர் மகிந்தவின் ஆட்சியில் தான் என்பதை நினைத்துப் பாருங்கள்.
செய்திக்கு
"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிறுபான்மை இன வேட்பாளர்கள் சிறுபான்மை இனத்தவர்களை கோமாளியாக நினைத்துக்கொண்டு தாங்கள் கோமாளிகள் ஆகிவிடுகின்றனர். மஹிந்த மாளிகையிலிருந்து வெற்றிவாகை சூடுவார்கள்" கிழக்கு மாகான அமைச்சர் ஹிஸ்புல்லாஜ்(வீரகேசரி)
செய்தி
சிறுபான்மை இனத்தவரை யாரும், குறிப்பாக நீங்கள் 'கோமாளிகளாக' நினைக்க வேண்டாம். 30ஆண்டுகளுக்கும் மேலாக பேரினவாதிகளின் 'கண்களுக்குள்' விரலை விட்டு ஆட்டி, தண்ணீர் காட்டியவர்கள் இலங்கையின் சிறுபான்மை மக்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்!
முதலமைச்சர் பதவிக்காக 'மடி தாழ்' பிச்சை கேட்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோமாளியாக துரத்துப்பட்டத்தை சற்று மீள் நினைவுக்குட்படுத்துங்கள்.
செய்திக்கு
'அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் ஆட்சிபீடம் ஏறினால் நாட்டுக்கு பெரும் ஆபத்து' - அமைச்சர் G.L.பீரிஸ்(வீரகேசரி)
செய்தி
அரசியல் அனுபவம் இல்லாத உங்களுக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லையா? அதுமட்டும் சாத்தியமில்லையா? கட்சி விட்டு கட்சி தாவுவதற்கு அனுபவமிருந்தால் போதும்.
செய்திக்கு
'ராஜ யோகம் என் ஜாதகத்திலுண்டு' - சரத் பொன்சேகா(வீரகேசரி)
செய்தி
அதிஸ்டத்தை நம்பி மரமேறி கைவிடுபவனுக்கொப்பானது உங்கள் கூற்று.
செய்திக்கு
'ஜனாதிபதியின் விருந்தில் மதுபாவிக்கலாம்' - எல்லாவல மேதானந்த தேரர்(வீரகேசரி)
செய்தி
காவிக்குள் மறைந்து பாராளுமன்றமும் வந்துவிட்டீர்கள். இனியென்ன சாது அவர்களே, உங்கள் பெயரில் மதுபானக்கடைக்கு 'பெர்மிட்' எடுக்கலாமே.. நல்ல காலம், புத்த பகவான் அவதாரம் எடுக்கவில்லை.
செய்திக்கு
'ஜனாதிபதி தேர்தலுக்குப்பின் தமிழருக்கு சமவுரிமை வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்' - பசில் ராஜபக்ச பா.உ.(வீரகேசரி)
செய்தி
செய்திக்கு
'போர்முகத்துக்கப்பால் சரத் பொன்சேகாவை தமிழ்மக்கள் பார்க்கவேண்டும்'. - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்(வீரகேசரி)
செய்தி
செய்திக்கு
(வீரகேசரி)
செய்தி
செய்திக்கு
'வழங்கிய வாக்குறுதிகளை நாலுவருடங்களில் நிறைவேற்றிய ஜனாதிபதி என்ற வகையில் முஸ்லிம் சமூகம் அவரை வெற்றிபெறச் செய்யவேண்டும்'. - அமைச்சர் ரிசாத் பதியுதீன்.(வீரகேசரி)
செய்தி
-
கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலை நினைவுபடுத்துங்கள் அமைச்சரே. ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கவேண்டியிருந்த நிலையில் ஜனாதிபதி கரணமடித்து பிள்ளையானுக்கு வழங்கியதும், அதற்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறப்பதாக கூறி விரட்டியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறந்துவிட்டு, வாக்குறுதிகளைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?
செய்திக்கு
'கடந்த ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை தமிழ்மக்கள் இம்முறையும் விடவேண்டாம்' - ரணில் (வீரகேசரி)
செய்தி
தொகுப்பு
இலங்கையிலிருந்து
மலையூர் பண்ணாகத்தான்
|
தணல் படைப்புகள்

 
|