நுழைவாயில்   தணல்ச்செய்திகள்    தணல்க்களம்      சிறப்பு ஆக்கங்கள்    பாலம்     செய்திக்குச் செய்தி

தணல் இணைப்புகள்

 

 

 

 

தாயும் தமிழும் தாய்த்திருநாடும்


என்னைப் பெற்று வளர்த்த தாயே
நான் தவழ்ந்து வளர்ந்த தமிழீழமே (தாய்நாடே)
தேனிலும் இனிய தாய்மொழித் தமிழே
கனிந்தேன் மனம் பணிந்தேன் தலை.


அன்னைத் தமிழே அழகுத் தமிழே
அண்ணன் வளர்த்த அண்ணைத் தமிழே
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் இந்த
அகிலம் வியந்திட வாழும் தமிழே வாழி.


இன்பத்தால் இதயங்கள் நிறைந்திடவே
எண்ணத்தால் உள்ளங்கள் உயர்ந்திடவே
வண்ணத் தமிழ் வானுயர வளர்ந்திடவே
பண்ணோடு பரணியில் தமிழரசு வாழியவே.


வாழ்ந்த தமிழர்கள் வாழும் வழியின்றி
வீழ்த்தினோம் என்ற வீணர்கள் களிப்பினை
ஆழ்ந்து சிந்தித்து ஆவன செய்வே நாம்
காழ்ப்புணர்வன்றிக் கூடுவோம் தமிழர்களே.


உலகத் தமிழர்கள் ஒன்றிணைவோம்
ஊன் உறக்கம் பாராது உழைத்திடுவோம்
உத்தமர்கள் போற்றிடவே உலக அரங்கில்
உன்னதத் தமிழுக்கு உறுதிசெய்வோம் தனியரசு.


செயோன்

 

<<பின்செல்ல

முன்செல்ல>>

தணல் படைப்புகள்

 

 

 

 

 

 

 

thanall.Com © 2009 • coppyrights reserved