தணல் இணைப்புகள்


  
|
மாவீரர் துதி பாடுவோம் கற்குந் தோறும் கரும்பெனச் சுவைதரும் நற் தமிழ் உலகத்துக் காவிய நாயகனே உலக வரைபடத்தில் தமிழீழம் பொறித்திட உழைத்திடும் உன்னதத் தலைவா வாழி. தலைவன் மடியில் தலைவைத்து தரணி எங்கும் புகழ் வைத்து எங்கள் தமிழீழச் சொத்தாம் சங்கர் அண்ணா தமிழ் வித்தாகிப் போனது மாவீரர் நாளன்றோ. நேரம் குறித்து சாவை வரிக்கும் தமிழ் தீரம்மிகு முதற் கரும்புலிவீரன் மில்லர்அண்ணா சோரம் போகும் சிங்களத்துச் சிப்பாய்களை கருகவைத்து மனதில் நின்றான் மாவீரனாய். அகிம்சை வழியென அலட்டும் காந்தி தேசம் அமைதிப் படையென அட்டகாசம் செய்தகாலம் அண்ணன் திலீபன் அகிம்சைதனைப் புகட்டி உண்ணாநோன்பில் உயிர் உகந்து மாவீரரானான். (உணர்த்தினான்.) கன்னல் தமிழையழிக்க கபடச் சிங்களநடையுடன் காந்திப் போர்வையில் வந்த இந்தியப் படைதனை அன்ன ஆதாரமின்றி அகிம்சையில் அகிலம் வியக்க அன்னை பூபதி தன்னை உகந்து தெய்வமானாள். நூலில் படித்த புறநாநூறுப் போர்ப் பரணிதனை நேரில் வடித்த வீரத் தமிழிச்சி மாலதி-கோப்பாய் சமரில் பாரதப் படைதனைக் கதிகலங்க வைத்து பாரில் உள்ள தமிழர் உள்ளத்தில் உறைந்தனள்.. நீரோடை நிலத்தோடும் பாக்கு நீரணையில் வேரோடு சாய்க வந்த சிங்களச் சிப்பாய்களை போராடிக் கடலில் கப்பலோடு மூங்கடித்துவிட்டு கடற்கரும்புலியானாள் அங்கையர்க்கண்ணி வாழி. எம் தேசியத்தலைவன் பிரபாகரன் வழிசென்று எழில்மிகு தமிழீழ விடுதலைக்கு முன் நின்று எதிரிகளைக் கொன்று புகழ்வான் புகுந்து நின்று ஏட்டிலும் மனத்திலும் நிறைந்த மாவீரர்களே வாழி. அணியணியாச் செய்துவிட்ட தியாகத்தை எண்ணி அடுக்காக வைத்துவிட்ட மாவீரத் தெய்வங்களே கண்ணீரை மலராக்கி கவி மாலை தொடுத்து நடுகல்லில் சாத்துகின்றோம் வணங்குகின்றோம்.
செயோன்
|
தணல் படைப்புகள்
| |