அரசுடன் இணைந்திருக்கும் இந்த தமிழ் குழுக்கள் ஒரேமாதிரியான சிந்தனையுடன் தமது பிற்பாட்டைப் பாடுகிறார்கள் என்பதை இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழருக்கான இறைமையையும் சுதந்திரத்தையும் சிங்களம் காலம் காலமாக வழங்க மறுப்பதை நன்றாகவே தெரிந்திருந்தும்
சிங்களப் பேரினவாதம் எப்போதும் தமிழ்மக்களின் உரிமைகளை தராது என்பதை மீண்டும் வெளிப்படையாக சொல்லிவிட்டது. சிங்கள தேசத்தின் மக்கள் ஆதரவளித்து 'பிச்சை' போடுவதைப் போல தரும் அரசியல் உரிமைக்காக நாம் ஏன் அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டும்? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழ்பேசும் மக்களின் மனங்களிலும் எழுகின்றது.
1949 முதல் தமிழ் மக்களின் குரலாகப் பரிணமித்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் பரிணாமம் பெற்றுள்ள கட்சிக்கு என்றென்றும் தமிழ் மக்களின் ஆதரவு தொடரவே செய்கின்றது என்பது இத்தேர்தலில் மீண்டும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
அடிவருடிகளாக இருக்கும் தமிழ் அமைச்சர்கள் தாமும் தம்மோடு சேர்ந்த தமிழ் சகபாடிகளையும் அழைத்துவந்து கதிரைகளை நிரப்பி ஜனாதிபதி மகிந்தாவின் முகத்தில் சிரிப்பைக் காண முனைவார்கள். இவையெல்லாம் காலம் காலமாக நடைபெற்றுவரும் வழமையான சம்பவங்கள்.
இறுதி நேரத்தில் தற்துணிவோடு தேசியத்தை நோக்காகக் கொண்டு சரியான பாதைக்கு வந்த மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் திருமதி பி. சிவகீதா மட்டக்களப்பு மாவட்டத்தின் விடிவெள்ளியாக தெரிகிறார்.<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>