2012 ம் ஆண்டு வாணிவிழாச் செய்தி!
அனைத்துப் பெற்றோர்களினதும் கவனத்திற்கு! ஆரம்பப் பாடசாலை மாணாக்கர்களின் நவீன தொடர்பூடகங்கள், பாவனை தொடர்பான விழிப்புணர்வுத் தகவல் திரட்டு. தற்காலத்தில் நவீன ஊடகங்களாக கணிக்கப்படுபவை தொலைக்காட்சி அடங்கலாக, கணணியும் அதனுள் இணையதளம், கைத்தொலைபேசி போன்றவை பாலகர்களை வெகுவாக ஈர்த்துவரும் தொடர்புச் சாதனங்களாகும். இது தொடர்பாக பெற்றோர்களின் பங்களிப்பு மிக அவசியப்படுகின்றது.Read More
தியாகி லெப். கேணல் திலீபனின் 25 ம் நினைவு நாள்!
தாயக விடுதலைப் போராட்டத்திலே அந்நிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கெதிராக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து இந்திய ஏகாதிபத்தியத்தின் கபட முகத்திரையை கிழித்தெறிந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரன் லெப். கேணல் திலீபனுக்கு 25 ம் ஆண்டு நினைவு வீரவணக்கங்கள்.Read More
மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்
31.08.2012 வணக்கம், மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலுக்கான அழைப்பு: எதிர்வரும் மாவீரர் நாள் நிகழ்வினை பிரித்தானியாவில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து சென்ற வருடத்தைப் போல் இம்முறையும் பொதுக்குழு அமைத்து ஒரே நிகழ்வாக, தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தியாக எழுச்சியுடன் மாவீரர்களுக்கான புனித நாளை சிறப்பாக நடாத்துவதற்கான சகல ...Read More
கிழக்குத் தேர்தலும் கூட்டமைப்பும்! – தசக்கிரீவன்
சுட்டெரிக்கும் கோடை வெயில் சற்று அசௌகரியத்தை தந்திருந்தாலும், எல்லோருமாக கூடி பலதையும் பத்தையும் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது என்ற விடயத்தில் ‘தசக்கிரீவனோடு’ ‘பண்ணாகத்தானும்’ நீண்டு நிமிர்ந்து இருக்கின்ற ஆலய முன்றலில் அரட்டைக்காக ஆலயத் தலைவர் உட்பட மேலும் பலருடன் அமர்ந்துகொள்கிறார்கள்.Read More
யூலைப் படுகொலை!
இலங்கையிலே மாற்றம் காணாத, தமிழருக்கு எதிரான வன்முறைகளின் தொடர்ச்சி பற்றி சர்வதேசம் உணர்ந்து வருகையில், இந்த யூலை மாத படுகொலையானது கலங்கரை விளக்காக மிளிர்வதை இக்கணத்தில் சர்வதேச மட்டத்தில் வாழும் வன்முறைக்கெதிரான அமைப்புகளுக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.Read More
நழுவிச்செல்லும் சீபாவும் விடாக் கண்டன் இந்தியாவும்-இதயச்சந்திரன்
வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மோசமான தாக்குதல்களின் விளைவாக கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டார். சொந்த மண்ணில் அவரின் உயிரற்ற சடலத்தைப் புதைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தற்போது அத்தாக்குதலில் அகப்பட்ட இன்னுமொரு அரசியல் கைதியான மரியதாஸ் நவிஸ் டில்ருக்சன் என்பவரும் சாவடைந்துள்ளார்.Read More
இந்திய மேகங்களும் தமிழ் கொக்குகளும்-இதயச்சந்திரன்
மண்ணில் வாழும் மக்களுக்கு மழை தேவை என்பதற்காக மேகங்கள் திரள்வதில்லை. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்தியா இலங்கைக்கு வருவதில்லை. சீன மழை பொழிந்து, இலங்கையின் ஆறுகளும், குளங்களும் நிரம்பி விடக் கூடாது என்பதற்காக, முதலீட்டு ஆதிக்க மழை பொழிய, இந்திய மேகங்கள், இலங்கையின் வான் பரப்பை ஆக்கிரமிக்க முயல்கிறது.Read More











