இலக்கியம்

இலக்கிய தணல்

…..வலி…….
காத்து காத்து மனம் வாடி
என்னை போல் காய்வது
தான் யாரோ…..பிரிவால்..

தேடி பிடித்தேன் காய்கின்ற
வெள்ளி நிலாவை!… என்
காதல் உன்னை தேடி வரும்
வலி அறிந்த தோழியென்று!

காலைக் கதிரவனின் கையில்
கடிதம்…. கொடுத்து அனுப்பி
இள நிலாவின் வருகைக்கு
மாலையில் காத்திருப்பேன்
உன் பதிலை எதிர்பார்த்து!

தடுக்கும் மேகங்களை விலத்தி
நகர்ந்து வரும் மஞ்சள் நிலா
என் வீட்டை நெருங்கும் போது
மட்டும் மரங்களின் நடுவே
ஒளிந்து கொள்ளும்,,,

மரங்கள் அடர்த்தியா என்
மனம் தான் அடர்த்தியா
நெஞ்சு வலிக்க செய்கிறதே!

நெஞ்சில் நீ மிஞ்சி இருப்பது
வலிக்கும் காதல் நெஞ்சுக்கு
கொஞ்சம் ஆறுதல் கொடுக்க
தொடரும் தேடல்…..

மரங்கள் இடையே சின்ன
சின்ன இடைவெளிகள் நடுவில்
தெரியும்… நிலா… நான் பார்க்கும்
நொடியில் மட்டும் முகிலுக்குள்
முகம் மறைத்து விடும்!

நீ இல்லாமல் என் முகம்
பார்க்க மறுக்கிறதா இல்லை
தன் முகம் காட்ட மறுக்கிறதா
தன்னந்தனியே போகும் நிலா

கேள்விகளை மட்டும் எனக்கு
வீசி விட்டு பதில் தர மறுத்து
முற்றம் தாண்டி போகும் அந்த
நிலாவை…என் விழிகள் தொடர்ந்து
துரத்தி செல்ல……….
கண்ணீர் வந்து நிறுத்தசொல்லி
பிரிவின் துயரை எழுத
தொடங்கும்!

நிலவின் சுவட்டை பார்த்துக்கொண்டு
தன்னந்தனியே
உந்தன் நினைவில் நான்..
வாடும் மனதோடு….

இமைகள் வலிக்க உள்ளம் கனக்க
இரவின் நீளம் முழுவதும் கண்ணீர்
எழுதிய கடிதத்தை கையில் தாங்கி
கதிரவனையும் காயும் நிலவையும்
மறந்து……..
உன்னையே எதிர்பார்த்து
இன்றுவரை காத்திருக்கிறேன்

சிந்தும் என் குருதியின் இறுதி
துளி உலரும் முன்பு ..
நீ வர வேண்டும்.

ஆயுதம் எடு போராட புறப்படு…

ஈழத்தில் சிங்கள இராணுவம் வந்ததே
கொட்டியது குண்டுகளின் மழை ஈழத்தில்
கொடுத்தாளே கொத்துக்குண்டை சோனியா
அதை அடித்தானே சிங்கள ராணுவம்..
ஈழத்தில் கூடிவாழ்ந்த மக்கள் விழுந்தனர் ஐயா..

பறித்தானே தமிழ் மக்கள் உயிரை பறித்தானே
கொத்தாய் பறித்தான் ஐயா சிங்களவன்
கூடிவாழ்ந்த மக்கள் எங்கே.? உறவுகள் எங்கே.?
நாங்கள் வாழ்ந்த கூறை வீடு எங்கே.?
ஓடியாடிய புல்வெளி எங்கே.?
பட்டம் ஏற்றிய அந்த வயல் வெளி எங்கே.?
போட்டானே சிங்களவன் நெருப்புக் குண்டை
வீடும் எரிந்தது ஐயா புல்வெளியும்
பொசுங்கியது ஐயா..
வயல் வெளியும் தீயில் வாடியது ஐயா..
அங்கு ஓடியாடிய சின்னஞ் சிறு
குழந்தைகளும் தீயில் வெந்தது ஐயா..

இலங்கை முழுவதும் தங்கள் நாடு என்று
சொல்லி அடிச்சானே சிங்களவன்..
அளித்தானே தமிழனை ஈழத்தில்
காலை எடுத்து வச்சானே சிங்களவன்
தொலைந்தது ஐயா எங்கள் நிம்மதி…

நாள் தோறும் தொழுத கோவில் எங்கே.?
கோயில் மீது கோடி குண்டுகள் வந்து விழுந்தது ஐயா
இங்கு லட்ச்சகனக்கான தமிழன் செத்தான் ஐயா..
தெய்வம் எங்கே சென்றது ஐயா..
பிறந்தோம் ஈழத்திலே அடிமையாக
வாழ்கின்றோம் இப்போது இங்கே..
நாள் தோறும் பாடம் படித்த பாடசாலை எங்கே.?
நண்பர்கள் எங்கே.? பாடம் சொல்லித்தந்த குருவும் எங்கே.?
பாடசாலை எல்லாம் சிங்கள ராணுவம் ஐயா..

இந்தியா ராணுவம் வந்தது ஐயா..
சிங்கள ராணுவம் வந்தது ஐயா..
கணவன் மனைவியை பிரித்தான் ஐயா..
தாயும் பிள்ளையும் பிரித்தான் ஐயா..
பெண்கள் கர்ப்பை பறித்தான் ஐயா..
கண்ணகி சாபம் மதுரையை எரித்தது ஐயா..
ஈழ பெண்களின் சாபம் இங்குள்ள
ராணுவத்தை அளிக்காத..?
பாதி தமிழன் ஈழத்தில் செத்தான் ஐயா
பாதி தமிழன் அடிமைகள் ஆனான்
தப்பிய தமிழனின் பாதி தமிழன்
காலை இழந்தான் ஐயா..
கையை இழந்தான் ஐயா..
கண்கள் தோண்ட பட்டது ஐயா..

யுத்தம் முடிஞ்சது என்று சொன்னான் ஐயா..
எங்களை இன்னும் அடிமைகளை வைத்து
கொடுமை படுத்துரான் ஐயா.
என் காலோ இல்லை என்னை
கொண்டு போய் அடிக்கிறான் ஐயா..
என் வாய் மட்டும் தான் பாடுது
ஐயா பட்ட காயம் இன்னும் ஆறவும் இல்லை
பட்ட துன்பம் இன்னும் தீரவும் இல்லை .
தமிழா நீ புறப்படு போராட இல்லையேல்
உனக்கும் எந்தன் நிலை தான் தமிழா..

Online Users