செய்திக்கு

‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அரசாங்கத்தை நிறுத்தவேண்டும்’ – சரத் பொன்சேகா.

‘நாட்டைக்காட்டிக்கொடுக்கும் துரோகிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்’. – அமைச்சர்கள்(வீரகேசரி)

செய்தி

 • நம்பியாருக்கும், வீரப்பாவுக்கும் போட்டி. சபாஷ்…… சரியான போட்டி

 

செய்திக்கு
 
‘இலங்கையின் சிறுபான்மையினர்  இந்நாட்டின் விருந்தாளிகள்  மட்டுமே’ என்று சரத் பொன்சேகா ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருவார் என்ற எதிர்பார்ப்பு தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. – எம். எம். சுஹைர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியும்.(தினகரன்)
 
செய்தி
 
 • சிறுபான்மையினர் சார்பாக முன்னாள் ஜனாதிபதி டி.பி விஜயதுங்க(1993) கூறிய கருத்தானது ‘சிறுபான்மையினர் பெருமரத்தை சுற்றிவளரும் கொடி’ என்பதை நினைவுக்குட்படுத்தவும் . காலத்துக்கு காலம் சிறுபான்மையினரைப் பற்றிய தரக்குறைவான அபிப்பிராயங்களை தெரிவிப்பதில் சிங்களத்தலைவர்கள் முந்திக்கொள்வார்கள். சரத் பொன்சேகாவின் கருத்துக்கு துள்ளிக்குதிக்கும் சுஹைர் ஐயாவே, மஹிந்த கொம்பனியின் கோத்தபாய ராஜபக்ச கூறிய ‘தமிழ் ஆண்கள் கடலுக்கும் தமிழ் பெண்களை சிங்கள இராணுவத்திற்கும் வழங்கவேண்டும்’ என்ற கருத்து சார்பாக நீங்கள் மௌனம் சாதிப்பது ஏன்? ஒருவேளை அது தமிழ் மக்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதாலோ?

 

செய்திக்கு

சரத் பொன்சேகாவை அரசாங்கம் சர்வாதிகாரியாக சித்தரிக்க முயல்கிறது(வீரகேசரி)

செய்தி

 • சோமவன்ச அவர்களே! எவரும் அவரை சர்வாதிகாரியாக சித்தரிக்க வேண்டிய தேவை இல்லை. அவர் சர்வாதிகாரி என்பதை அனைவரும் அறிவார்கள். உங்களுக்கு இது புதிய விடயமாக இருக்கலாம். இனியாவது சொந்த நாட்டில் தங்கியிருங்கள்.

செய்திக்கு

அமைச்சர் முரளிதரனுக்கு வழங்கப்பட்ட பதவி எஸ்.பிக்கும் வழங்கப்படவுள்ளது. (தமிழ்வின்)செய்தி
 • ஐயா SP அவர்களே பிரதமர் பதவியும் அமைச்சர் பதவியும் ஹவுஸ்புல்.
 • ஒருபோதும் உபதலைவர் பதவி ‘ஹவுஸ்புல்’ ஆகாது. நம்பிவரலாம்.

செய்திக்குகூட உயிர் வாழ்வார் என்பது நிதர்சனம்.

செய்திக்கு….மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன்.(வீரகேசரி)மோசடியில் ஈடுபட்டவர்களை மக்கள் முன் நிறுத்துவேன்’ – சரத் பொன்சேகா(வீரகேசரி)சகோதனுக்கு மட்டும் எதிரியல்ல உங்களுக்கும்தான். ஏனென்றால், தமிழ் ஆண்களை சமுத்திரத்திலும் தமிழ் பெண்களை உங்கள் இராணுவத்துக்கும் வழங்கவேண்டும் என கூறிய பௌத்த காருண்ணியம் மிக்கவரல்லவா நீங்கள்?

ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம். அண்மையில் சுவிசில் நடைபெற்ற கருத்தரங்கமர்வில் பலவிடயங்களை ஆணித்தரமாக கூறியுள்ளேன். –  

செய்தி

 • ஐயா! நீங்கள் எப்போதாவது நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியதுண்டா? இப்படிச்சொல்லிச்சொல்லியே காலத்தை கடத்திவிட்டீர்கள். இது கூறவா நீங்கள் சுவிஸ் கருத்தரங்கிற்கு சென்றீர்கள்? – பாவம் மக்கள்.

 

செய்திக்கு…..

ஆட்சிக்கு வந்ததும் ஊழல்

செய்தி

 • இராணுவ தளபதியாக பன்னெடுங்காலமாக பணியாற்றிய நீங்கள் உட்பட, உங்களின் கட்டளைக்கு கீழுள்ள இராணுவவீரர்கள் அடங்கலாக இதுவரை காலமும் தமிழ்மக்களுக்கு செய்த நெருக்குவாரங்களை எந்த ஊழல்மோசடியின் கீழ் மக்கள்முன் நிறுத்த போகிறீர்கள்?

 

செய்திக்கு….

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெயர்ந்த மக்கள் அங்குள்ள அரச காணியில் குடியேறலாம்’ – அமைச்சர் முரளீதரன்(கருணா)(வீரகேசரி)

செய்தி

 • ஐயா! சம்பூர், கடற்கரைச்சேனை, சூடைக்குடா, கூனித்தீவு போன்ற பகுதிகள் இதுவரை மீள்குடியேற்றப்படாமல் உள்ளதால் அவர்களை அரச காணியில் குடியேற சொல்வீர்களோ? அரச காணியில் குடியேறலாம் என்ற அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது? இலங்கையின் அமைச்சராக இருக்கும் நீங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் உயர்நீதிமன்ற அனுமதியின் பின்னும் இதுவரை சொந்த இடங்களில் குடியேற்றப்படாமல் 6963 பேர் 67 நலன்புரி நிலையத்திலிருப்பதையும் 21 பாடசாலைகள் இயங்காமல் இருப்பதையும் 9 பாடசாலை வேறொரு இடத்தில் இருப்பதையும் 16 பாடசாலைகள் பாதுகாப்பு வலயத்துள் இருப்பதையும் அறிவீர்களா? இவர்களையும் வலிகாமத்தில் அரச காணி இல்லாத நிலையில் எங்கு கொண்டு குடியேற்றுவதாக உத்தேசம்.

 

செய்திக்கு

இலங்கையில் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு படைத்தளபதிகளே காரணமாக இருந்தனர்’ – கோத்தபாய(தமிழ்வின்)

செய்தி

 • படைத்தளபதியே காரணமென்றால், அவர்களுக்கான உத்தரவை வழங்கும் பாதுகாப்பு செயலாளரான உங்களிற்கு பங்கு இல்லையா?

செய்திக்கு….

புலிகள் தோற்கடிக்கப்பட்டத்தை விரும்பாத மேற்குலக சக்திகள் ஜனாதிபதிக்கெதிராக சூழ்ச்சி’. – கோத்தபாய ராஜபக்ச(வீரகேசரி)

செய்தி

 • மனிதநேயத்தை நேசிக்கும் மேற்குலகம் உங்கள்

 

‘இலங்கையின் கிழக்குப்பகுதியில் புதிய போராட்டக்குழு (மக்கள் விடுதலை இராணுவம்) உருவாக்கம்.(தி டைம்ஸ்)

செய்தி

 • மக்கள் விடுதலை இராணுவமெனும் புதிய ஆயுதக்குழு உருவாக்கம் தமிழீழத்தில் உருவாவது இலங்கை அரசுக்கு மாத்திரம் ‘கிலி’ ஏற்படுத்தவில்லை கூடவே கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்து கட்சி தாவிய எம்மவர்களுக்கும் தான்.

 

செய்திக்கு

‘தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிமூலங்களில், ஆயுதக்கொள்வனவில் பிரபாகரன் வாழ்கிறார்'(தி டைம்ஸ்)

செய்தி

 • ஆயுதக்கொள்வனவில் மட்டுமல்ல, தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனின் இதயங்களிலும் குறிப்பாக எதிரிகளின் இதயங்களிலும்  

 

செய்திக்கு
 
வடக்கு-கிழக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வே தேவையற்றது என அரசாங்கம் எண்ணுகிறது’
ஐக்கியதேசிய கட்சிக்கு மாறிய இலங்கை தொளிலாளர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஜோகராஜன் கூறுகிறார்.
 
செய்தி
 
 • ‘தானாடாவிட்டாலும் தன் தசையாடும்’ என்று பாராளுமன்றத்தில் என்றோ அமரர் செளன்யமூர்த்தி தொண்டமான் 
 • அவர்கள் கூறியது நினைவில் நின்று கிளர்ந்தெழுகிறது. 
 
செய்திக்கு
 
திருக்கோணமலை நகரசபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் சபைத்தலைவருடன் உறுப்பினர்கள் வாக்குவாதம். ஆளும்கட்சி உறுப்பினர் சபைத்தலைவரின் உத்தரவின் பெயரில் உறுப்பினர் ஒருவர் போலீசாரால் வெளியேற்றப்பட்டார். இதனை ஆட்சேபித்து செல்வராஜா, கரிகாலன்
வெளியேறினார்கள்.(வீரகேசரி)
 
செய்தி
 
 • நியாயம் கேட்டதற்கு போலீசாரை ஏவிவிட்ட தலைவா எதிர்காலத்தில் மக்கள் ஏவுகின்ற கணைகளை எப்பிடித் தாங்கப்போகின்றீர்கள்? உங்களின் பேரினவாதிகளின் கூட்டு இதற்கு மேலேயும் செய்யச்சொல்லும்.
 
 
செய்திக்கு
 
‘முஸ்லீம் காங்கிரஸ்’ கலிமாவைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லீம் காங்கிரஸ் யாருக்கும் அடகு வைக்கவில்லை. மகிந்த  ராஜபக்சவை சகல மதங்களையும் சேர்ந்தவர்களும் அவரை ஆதரிக்கிறார்கள் – ஜனாதிபதி ஆலோசகரும், ஊடக ஆலாச்சி அதிகாரியான அல்ஹாஜ் அஸ்வர்(வீரகேசரி)
 
செய்தி
 • ‘கலிமா’ வை கொண்டும் ‘ஹதீஸைக்’ கொண்டும் ஆரம்பிக்கப்பட்ட ‘முஸ்லீம் காங்கிரஸ்’ பலாத்காரமாக பள்ளிவாசலைக் கட்டவில்லை. பௌத்த தர்மத்தை அடித்தளமாகக் கொண்ட மகிந்த அரசு இலங்கையின் முதல் துறைமுகமான இலங்கைத் துறைமுகத்துவாரம் (திருக்கோணமலை மாவட்டம்) உட்பட பல தமிழர் பிரதேசங்களில் பலவந்தமாக பௌத்த விகாரை அமைத்திருப்பதைப்பற்றி அஸ்வர் அவர்களே என்ன சொல்கிறீர்கள்? முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மொழிபெயர்ப்பாளர். இந்நாளில் மகிந்தவின் ஊடக ஆலாச்சி(ஆராத்தி) அதிகாரியல்லவா? இப்படி விலைபோனால் அப்படித்தான் பேசவேண்டும்.
 
செய்திக்கு
 
சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் 6 நிமிடத்தில் இராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்துவார் – ரிஷாத் பதியுதீன்(Dan TV)
 
செய்தி
 
 • இலங்கையில் இராணுவ ஆட்சியை எவரும் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஏன், அமைச்சரே! அமைச்சர் பாயிஸ் புத்தளத்தில் மக்கள் மத்தியில் உங்களுக்கு அடித்ததும், கைத்துப்பாக்கியால் மிரட்டியதும், அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை  எடுக்கவில்லை என நீங்கள் ஓலமிட்டதும், உங்களின் ரட்சகர் மகிந்தவின் ஆட்சியில் தான் என்பதை நினைத்துப்  பாருங்கள்.

 

செய்திக்கு

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிறுபான்மை இன வேட்பாளர்கள் சிறுபான்மை இனத்தவர்களை கோமாளியாக நினைத்துக்கொண்டு தாங்கள் கோமாளிகள் ஆகிவிடுகின்றனர். மஹிந்த மாளிகையிலிருந்து வெற்றிவாகை சூடுவார்கள்” கிழக்கு மாகான அமைச்சர் ஹிஸ்புல்லாஜ்(வீரகேசரி)

செய்தி

 • சிறுபான்மை இனத்தவரை யாரும், குறிப்பாக நீங்கள் ‘கோமாளிகளாக’ நினைக்க வேண்டாம். 30ஆண்டுகளுக்கும் மேலாக பேரினவாதிகளின் ‘கண்களுக்குள்’ விரலை விட்டு ஆட்டி, தண்ணீர் காட்டியவர்கள் இலங்கையின் சிறுபான்மை மக்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்!
 • முதலமைச்சர் பதவிக்காக ‘மடி தாழ்’ பிச்சை கேட்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோமாளியாக துரத்துப்பட்டத்தை சற்று மீள் நினைவுக்குட்படுத்துங்கள்.

 

செய்திக்கு

‘அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் ஆட்சிபீடம் ஏறினால் நாட்டுக்கு பெரும் ஆபத்து’ – அமைச்சர் G.L.பீரிஸ்(வீரகேசரி)

செய்தி

 • அரசியல் அனுபவம் இல்லாத உங்களுக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லையா? அதுமட்டும் சாத்தியமில்லையா? கட்சி விட்டு கட்சி தாவுவதற்கு அனுபவமிருந்தால் போதும்.

 

செய்திக்கு

‘ராஜ யோகம் என் ஜாதகத்திலுண்டு’ – சரத் பொன்சேகா(வீரகேசரி)

செய்தி

 • அதிஸ்டத்தை நம்பி மரமேறி கைவிடுபவனுக்கொப்பானது உங்கள் கூற்று.

 

செய்திக்கு

‘ஜனாதிபதியின் விருந்தில் மதுபாவிக்கலாம்’ – எல்லாவல மேதானந்த தேரர்(வீரகேசரி)

செய்தி

 • காவிக்குள் மறைந்து பாராளுமன்றமும் வந்துவிட்டீர்கள். இனியென்ன சாது அவர்களே, உங்கள் பெயரில் மதுபானக்கடைக்கு ‘பெர்மிட்’ எடுக்கலாமே.. நல்ல காலம், புத்த பகவான் அவதாரம் எடுக்கவில்லை.

 

செய்திக்கு

‘ஜனாதிபதி தேர்தலுக்குப்பின் தமிழருக்கு சமவுரிமை வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்’ – பசில் ராஜபக்ச பா.உ.(வீரகேசரி)

செய்தி

 • இப்போதும் கூட சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தானே உங்கள் சகோதரர் இருக்கிறார். ஏன் தேர்தலுக்குப்பின் …… இப்போதே கொடுக்கலாம் தானே? ‘கொடுக்க விரும்பாதவன் சினை ஆட்டை காட்டுவது போல’

 

செய்திக்கு

‘போர்முகத்துக்கப்பால் சரத் பொன்சேகாவை தமிழ்மக்கள் பார்க்கவேண்டும்’. – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்(வீரகேசரி)

செய்தி

 • ஒவ்வொரு வன்னி மக்களின் முகத்திலும் சரத் பொன்சேகாவின் போர்முகம் தான் தெரிகிறது. எப்படி ஐயா அந்த போர்முகத்தை மறைக்க முடியும். காலம் காலமாக நிலைத்திருக்கும் முகமல்லவா?

செய்திக்கு

‘வழங்கிய வாக்குறுதிகளை நாலுவருடங்களில் நிறைவேற்றிய ஜனாதிபதி என்ற வகையில் முஸ்லிம் சமூகம் அவரை வெற்றிபெறச் செய்யவேண்டும்’. – அமைச்சர் ரிசாத் பதியுதீன்.(வீரகேசரி)

செய்தி

 • கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலை நினைவுபடுத்துங்கள் அமைச்சரே. ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கவேண்டியிருந்த நிலையில் ஜனாதிபதி கரணமடித்து பிள்ளையானுக்கு வழங்கியதும், அதற்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறப்பதாக கூறி விரட்டியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறந்துவிட்டு, வாக்குறுதிகளைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

 

செய்திக்கு

‘கடந்த ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை தமிழ்மக்கள் இம்முறையும் விடவேண்டாம்’ – ரணில் (வீரகேசரி)

செய்தி

 • இன்னுமொரு கருணா ஆயத்த நிலையில்.

செய்திக்கு

அமைச்சர் சந்திரசேகரனின் மரணத்திற்கு ஜனாதிபதியே காரணம். அபிவிருத்தி நிதி வழங்குவதாக கூறப்பட்ட பெரும்தொகைப்பணம் அமைச்சருக்கு வழங்கப்படவில்லை. – தமிழ்வின்(07 .01 .2010௦)

செய்தி

 • ‘அமைச்சரின் அபிவிருத்திக்கு’ நிதிவழங்குவதாக கூறி வழங்கவில்லை என்றால் அவரின் கற்பனைக் கோட்டைகள் எத்தனை சிதறுண்டிருக்கும்?
 • ஜனாதிபதித் தேர்தல் முடியுமுன் இப்படி எத்தனை அமைச்சர்களின் ‘முடிவுக்கு’ ஜனாதிபதி காரணமாக இருக்கப்போகின்றாரோ?
   
  செய்திக்கு
   
  ‘இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழ்மக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது’ – ந. ஸ்ரீகாந்தா – பா.உ.(Dan TV)
   
  செய்தி
   
  • சபாஷ்! சரியாக சொன்னீர்கள்!
  • பிரிந்து நின்று சொல்லாதீர்கள்! இதை கூட்டமைத்துக்கொண்டு சொல்லுங்கள். அதோடு தமிழ்மக்களின் வாக்குகள் மகிந்தாவை ஜனாதிபதியாக்காமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
   
   
  செய்திக்கு
   
  ‘பட்டியலில் பெயர் வரவேண்டும் என்பதற்காக தமிழ் முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வெற்றி பெறப்போவது மகிந்த ராஜபக்ச என்பது தெரிவதால் அந்தப்பக்கம் மக்கள் செல்லவேண்டும்’ கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) – வீரகேசரி
   
  செய்தி
   
  • ‘விழுந்த பக்கம் குறிசுடுவது’ உங்களுக்கு ஒன்றும் புதியதல்ல. காலம் விரைவில் பதில் சொல்லும்.

   

  தொகுப்பு

  இலங்கையிலிருந்து
  மலையூர் பண்ணாகத்தான்