அன்புள்ள மகிந்தா மாமாவுக்கு,நான் கடிக்க மிளகாய் எழுதிக்கொள்வது, அவசர அலுவலாக வெளியூர் சென்றிருந்தததால் சில மாதங்களாக அரசியல் அலசல்களில் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் தற்போதைய உங்களின் நிலை குறித்து வேதனையடைந்த நான் சில ஆலோசனைகளை கூறிவிடலாம் என நினைக்கின்றேன்.

எனது ஆலோசனை என்பது உங்களை சுற்றி இருப்பவர்கள் கூறுவதுபோல குரங்குவால் போல் நீண்டு செல்லாது. இந்த பத்தியின் முடிவில் ஒரு வரியில் எனது ஆலோசனை இருக்கும். அதனை பார்த்து உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையால் நீங்களும், உங்களை சுற்றியுள்ளவர்களும் வெகுவாக ஆடிப்போய்விட்டிர்கள் என்பதை உங்களின் நடவடிக்கைகளில் இருந்து அறிந்து கொண்டேன்.

அதனை முறியடிப்பதற்கு பல இராஜதந்திரிகளை நீங்கள் நியமித்துள்ளதுடன், மே தினத்தில் மிகப்பெரும் ஊர்வலத்தை நடத்தி சிறீலங்கா மக்கள் உங்களுடன்தான் என்று காட்டப்போகிறீர்களாம். எந்த நாதாரி மாமா உங்களுக்கு இந்த ஆலோசனைகளை தந்தது?
அமெரிக்கா தன்மீது தாக்குதல் நடத்தப்போகின்றது என்பதை தெரிந்துகொண்ட ஈராக் அதிபர் சதாம் குசேன் 2002 ஆம் ஆண்டு ஈராக்கில் தேர்தல் ஒன்றை நடத்தி தனக்கு 99.9 விகித மக்கள் வாக்களித்துள்ளதாக காட்டியிருந்தார். ஆனால் அதன் பின்னரும் தொமகவ் குரூஸ் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது மாமா. மாமா நீங்கள் மகாவம்சத்திலும் இடம்பிடிக்கப்போகிறீர்களாம், நல்லது மாமா, பண்டைய கால சரித்திரங்களை புரட்டுவதை கைவிட்டு நிகழ்கால சரித்திரங்களை புரட்டுங்கள் மாமா.

 ஏனெனில் சதாம் குசேன் கூட குருதியினால் குரானை எழுதி பள்ளிவாசலில் வைத்தவர் தான். ஆனால் என்ன நடந்தது? தனது தலை தான் முதலில் உருளப்போகின்றது என்பதை தற்போது உறுதிப்படுத்திக்கொண்டுள்ள உங்களின் சகோதரன் கோத்தா, சீனாவையும், ரஸ்யாவையும் கூட்டிக்கொண்டு வரப்போவதாக மிரட்டுகிறார். அவரின் மிரட்டலை நம்பி நீங்கள் ஏமாரவேண்டாம், ஏனெனில் லிபியாவின் தெற்கு பகுதியில் மட்டும் 44 பில்லியன் பரல் எண்ணைப்படிவுகள் உள்ளது மாமா.

ஈராக் தற்போது உற்பத்தி செய்யும் எண்ணையின் அளவு நாள் ஒன்றிற்கு 2.6 மில்லியன் பரல்கள். இந்த நாடுகளை கூட கைவிட்ட சீனாவும், ரஸ்யாவும் உங்களின் கருவாடு காயப்போடும் துறைமுகத்தை காப்பாற்ற ஓடிவருவார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா?? வழமைபோல அவர்கள் எதிர்ப்பை காண்பிப்பார்கள் அவ்வளவு தான் அதற்குமேல் என்ன செய்ய முடியும்.
லிபியா பிரச்சனையிலும் வெளிநடப்பு செய்தவை தான், ஆனால் அவர்களில் தலைக்கு மேலால் உரசிச் சென்ற ரொர்னடோ ஜி-2 குண்டு விமானம் லிபியாவுக்குள் புகுந்துவிட்டது. மேற்குலகத்தை சீனா முழுமையாக எதிர்த்தால் சீனர்கள் செய்யும் பொம்மைகளை அவர்களே வைத்து விளையாட வேண்டிய நிலை தான் ஏற்படும். அது சீனாவுக்கும் தெரியும்.

ரஸ்யா காரர்களில் நிலையும் அதுதான் கோதுமை மாவைக் கூட அமெரிக்காவிடம் கடன் கேட்கின்றனர். உலகிலேயே ஒரு டசின் விமானம்தாங்கி கப்பல்களை கொண்ட ஒரே நாடு அமெரிக்கா தான் மாமா. அவர்கள் நடத்தும் வானவேடிக்கைகளில் எவற்றை உங்களுக்கு உதவுவார்கள் என நீங்கள் எதிர்பார்க்கும் சீனாவும், ரஸ்யாவும், இந்தியாவும் தடுத்துள்ளன?

கொசோவோ, சேர்பியா, மென்ரோநீக்கிரோ, அல்பேனியா, ஆப்கானிஸ்த்தான், ஈராக், தென் சூடான், லிபியா, ஐவோரி கோஸ்ட், எகிப்து, துனீசியா, யேமன், சிரியா என அவர்கள் கால்வைத்த இடங்கள் அனைத்தும் வெற்றியை தான் கண்டுள்ளனர். ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் கைக்கொண்ட உத்திகள் வேறு மாமா. நீங்கள் எதிர்பார்க்கும் பதையால் அவர்கள் வரப்போவதில்லை. மின்சார நாற்காலில் உக்காரப்போவதாக கூறி சிங்கள மக்களை உசுப்பேத்தியுள்ளீகள்; மாமா. நல்லது, நீங்கள் மின்சார நாற்காலி என்று சொன்னது, உங்களை கொண்டுபோய் அமெரிக்காவில் கொல்லுவார்கள் என்று மக்களை ஆத்திரமடையச் செய்வதற்காகத்தான் என நினைக்கிறேன் மாமா. ஏனெனில் சிறீலங்காவில் மின்சாரக்கதிரை கிடையாதுதனே.

இங்கேயும் ஒரு தப்பு பண்ணீட்டிங்கள் மாமா, மீண்டும் சமகால வரலாற்றை பாருங்கள், சதான் குசேiனை கூட்டிச் சென்று ஈராக்கில் தான் தூக்கினார்கள், போர்க்குற்றவாளியான யூக்கோஸ்லாவாக்கியா அதிபரும் தனது நாட்டில் வழக்கை சந்திக்கும்போதே மரணத்தை தழுவினார். துனிசியா அதிபருக்கும் அங்கு தான் சாவு. இவை என்னத்தை கூறுகின்றன?
உங்களை மாதிரி நாதாரிகளை கொண்டுபோய் தமது நாட்டில் தூக்கி தங்களின் பெயரை அவர்கள் கெடுக்கப்போவதில்லை.

 உங்களுக்கு உங்கே தான் மாமா தூக்கு கயிறு. எனினும் நீங்கள் பதவியில் இருப்பதால் கொஞ்சம் தாமதமகலாம்.
ஆனால் நீங்கள் முன்னர் நினைத்தது போல 40 வருடங்கள் சிறீலங்காவை ஆட்சி செய்ய முடியாது மாமா, 18 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தது கூட சுத்த வேஸ்ட். ஏனென்றால் உலகில் 30 வருடம் 40 வருடம் என ஆட்சி செய்தவர்கள் எல்லாம் துண்டக்காணோம் துணியக்காணோம் என ஓடுகிற காலமிது. நீங்கள் ரீவி பார்க்கிறனியள் தானே.

கேணல் கடாபிக்கு விழுகிற அடியை பார்த்து தமது நாட்டிலும் ஒருவர் 10 வருடம் மட்டுமே ஆட்சி செய்யலாம் என கியூபா தன்னிட்;சையாகவே அறிவித்துள்ளது. முறுக்கு மீசையுடன் திரிந்த சிரிய அதிபர் அசாத் கூட மிசையை மளித்துவிட்டு வெள்ளைக்காரனை போல காட்சி தருகின்றார்.
என்ன மாமா செய்வது, காலம் கெட்டுக்கிடந்தால் புடலங்காய் கூட பாம்பாகத் தான் தெரியும். உங்கட நிலையும் அப்படித்தான். பிரித்தானியாவில் இருந்து தலைதெறிக்க ஓடிய நீங்கள், உலகக்கோப்பைக்கான துடுப்பாட்ட போட்டியில் இருந்தும் நடுச்சாமத்தில் தலையிலை துண்டைப்போட்டுக்கொண்டு ஒடியிருக்கிறீர்கள்.

இப்ப உங்களுக்கு ஓடுகிற காலம். மலையாள மந்திரிகர்கள் தந்த தாயத்துக்களுக்கும், மந்திரித்த நூல்களும் கூட வேலைசெய்யுதில்லை என கேள்விப்பட்டேன். படுகொலைகளை செய்துபோட்டு சாமி கும்பிட்டு என்ன பிரயோசனம்???
சரி மாமா எனக்கு நேரமாகீட்டுது, நான் சொல்ல வந்த ஆலோசனையை மறந்துபோடுவேன். என்னென்றால், உங்களை சுத்தியிருப்பவர்கள் கூறுவதை கேட்டு இருக்கிற கொஞ்சக்காலத்தையும் பாழடிக்க வேண்டாம் மாமா. 1991 ஆம் ஆண்டு வீழ்ந்த சோவித்து தொடக்கம் – தற்போது விழப்போகும் லிபியா வரையிலும் நடந்த பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து றூம் போட்டு யோசித்துப் பார்த்தேன் மாமா. எனக்கு ஒன்று மட்டும் தான் விளங்கியது.

“Count your days”      மாமா. இது தான் எனது ஒரு வரி ஆலோசனை. அதனை மாற்றமுடியாது மாமா. இதனை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். நான் வாரன் மாமா. என்றும் நீங்கள் செய்த படுகொலைகளை மறக்காத, கடிக்க மிளகாய்.

(tamilkathir)