சுவிஸ் மத்திய அரசு அகதி அந்தஸ்த்துக் கோரி பின்னர் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு முடிவெடுத்திருக்கிறது.

சுவிசில் 20 நிமிடப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் இந்த செய்திக்கு தயவுசெய்து சுவிஸ் வாழ் அனைத்துத் தமிழ் உள்ளங்களும் கருத்து(Komentar) தெரிவிக்கும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தற்பொழுது இலங்கையில் நிலவுகின்ற சூழ்நிலையில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு சுவிஸ் வாழ் தமிழர்கள் ஆகிய நாங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்பதை 20 நிமிடப் பத்திரிகையில் நாம் எல்லோரும் தெரிவிக்கும் கருத்துக்களின்(Komenta) மூலம் சுவிஸ் அரசாங்கத்திற்கும் சுவிஸ் மக்களுக்கும் தெரிவிப்போம்.

இந்தச் செய்தியுடன் தமிழர் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதையும், இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களின் மீழ் குடியேற்றத்திற்காக வழங்கப்படும் வெளிநாட்டு உதவிகளை போரினால் பாதிக்கப்படாத இலங்கையின் தென்பகுதிகளில் சிங்கள மக்களின் பகுதிகளை வளப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்றதென்பதையும் சுவிஸ் மக்களுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் எடுத்துரைப்போம். இலங்கை அரசாங்கம் நடந்து முடித்த கொடூரமான போரை நடாத்தும் போது, போரை நிறுத்தும்படி கோரிய உலக நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டு தமிழ்மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்று கூறியதுபோல் எந்தத் தீர்வையும் இன்றுவரை வழங்கவில்லை என்பதையும் உலக நாடுகளுக்கும் சுவிஸ் மக்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எடுத்துக் கூறுவோம்.

குறைந்த பட்சம் தமிழர்கள் நிம்மதியாக வாழ, அன்று உலக நாடுகளிற்கு உறுதியளித்த தீர்வையாவது தரும்படி, தமிழர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப நினைக்கும் நாடுகளைக் கொண்டு வலியுறுத்துவோம். இல்லாதுவிடின் தமிழ்மக்கள் தொடர்ந்தும் இலங்கையை விட்டு வெளியேறி பிற நாடுகளில் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கொண்டேயிருப்பார்கள் என்பதையும் சுவிஸ் மக்களுக்கும் ஏனைய உலக நாடுகளிற்கும் தெளிவுபடுத்துவோம்.

http://www.20min.ch/news/schweiz/story/Tamilen-muessen-wieder-nach-Hause-30651286