வெள்ள அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் முனைப்பு றிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள துறவந்தியமேடுக்கிராம மக்களுக்கான நிவாரணப்பொருட்களை வழங்கிவைத்தனர்.

தீவுப்பகுதியான இப்பிரதேச மக்கள் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகின்றது படகின் மூலம்.இன்று அக்கிராமத்துக்குச்சென்ற முனைப்பின் தொண்டர்கள் அப்பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன்,மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

மக்களுக்கான நிவாரணப்பொருட்களை பட்டிருப்பு,திருக்கோவில் கல்விவலயங்களுக்கான கணக்காளர் க.அரசரெத்தினம்,கவிஞர் க.பாக்கியராஜா(அக்கரைப்பாக்கியன்) ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இதேவேளை நேற்றையதினம் படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள பழுகாமம், கன்னன்குடா கிராமமக்களுக்கும் நிவாரணப்பொருட்கள் முனைப்பினால் வழங்கிவைக்கப்பட்டதாக முனைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களுக்கும் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்,வைத்தியம்,கல்வி, சிறுவர்போசாக்கு போன்ற விடயங்களுக்கு இனிவரும் காலங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படுமெனவும் முனைப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.

திகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.