கிழக்குமாகாணம் எங்கும் பெய்துவரும் அடைமழை காரணமாக இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் எந்தவித உதவிகளும் இன்றி, அவலப்படுகின்றார்கள். 

தொடர்ந்தும் மக்கள் மரங்களிலும், உயர் திடல்களிலும் பாடசாலைகளிலும், பாரிய அவலங்கங்களில் அனைவராலும் கைவிடப்பட்ட  நிலையில் கண்ணீருடன் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 112,039 குடும்பங்களும்    அம்பாறை மாவட்டத்தில் 80,410 குடும்பங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 5346 குடும்பங்களும், எல்லாவற்றையும் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். இவை தற்காலியமாக எமக்கு கிடைத்த தரவுகளே.

யாரிடம் போவோம்
யார்க்கு எடுத்துரைப்போம்
நீரே எம் நம்பிக்கை ஒளி
எமைக் கரைசேர்ப்பீர்
உறவுகளே!

நம்பிக்கை ஒளி