ஓவ்வொரு இரவும் விடிகின்ற பொழுது எங்கள் வாழ்வில் ஒரு விடியல் வந்துவிட்டதா என்ற கனவுகள் சிதைக்கப்பட்டன. விடிந்துவிட்டது என்றால் அடுத்த நாள் இரவுக்குள்  எனது உறவுகள்  இருக்குமா அல்லது நான் தான் உயிரோடு இருப்பேனா.

என்ற ஏக்கம் மனதுக்குள் குடிகொண்டது. எங்குமே இரத்தக் கறைகளும் அழுகைக் குரல்களும் வெளியில் போக முடியாதயளவிற்கு மழை போல் எறிகணைத் தாக்குதல். மக்களின் பிணங்களை வீதியோரங்களில் கிடந்தன. அவர்களை ஒரு புதை குழிக்குள் போட்டு மூடமுடியாமல் எறிகணைகள் வீழ்ந்த வண்ணம். இருந்தது.

கொத்து கொத்தாக காயமடைந்து குருதி வெள்ளத்தில் மிதந்தார்கள். யார் யாரை பார்ப்பது என்ற நிலைமை. இன்னும் சிலர் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு ஓடினார்கள். ஆனால் இனவெறிபிடித்த சிங்களவர்களால் வைத்தியசாலைகளுக்கும் எறிகணைத்தாக்குதல்களை நடாத்தினான். அங்கேயும் மக்கள் உடல் சிதறிப் பலியாகினார்கள் எங்கேயும் போகமுடியாத சூழ்நிலையில் எமது மக்கள் திணறித் தவித்தனர். வட்டுவாகல் நந்திக்கடல் ஊடாக சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்த மக்களை இராணுவத்தினர் மனிதாபிமானத்துடன்  பார்க்கவில்லை. உணவு, உடமைகள் எதுவும் இல்லாமல் தமது உயிர் தப்பினால் போதும் என்று சரணடைந்த அப்பாவி மக்களை சிங்களப் படையினர் கொஞ்சங்கூட ஈவிரக்கமில்லாமல் மிரட்டியும், அடித்தும், சித்திரவதை, செய்தார்கள்.

இனவெறி பிடித்த சிங்களப் படையினர் வெள்ளைக்கொடியோடு வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் அவர்களுடன் வந்த போராளிகளையும் எல்லோரது கண்முன்னிலையிலும் அழைத்து சென்று அடித்தும், சித்திரவதை செய்தும், சுட்டுக்கொன்றுள்ளான். பெண் போராளிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டான். அவனது மிருகத்தனமான செயற்பாடுகள் பார்த்தவர் மனங்களில் மாறாத வடுவாக உள்ளது. பின்னர் அங்கிருந்து மக்களை ஓமந்தைக்கு கொண்டு சென்றான். ஓமந்தையில் வைத்து மக்களை வெவ்வேறாக பிரித்து. சந்தேகத்தின் பேரில் பலரும், இனம் காணப்பட்ட போராளிகள் பலரும் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் பலரது பதிவுகளோ தகவல்களோ இது வரைக்கும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் எங்கு என்றே தெரியாத நிலை. சிலரை சித்திரவதை செய்து படுகொலை செய்துவிட்டு அவர்கள் போரின்போது இறந்து விட்டார்கள் என்று உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கூறிவருகிறான். அவர்களது பெற்றோர், உறவினர்கள் தம் பிள்ளைகள் தம் கண் முன்னே பிடித்து சென்ற தம் பிள்ளைகளை இன்றும் தேடி அலைந்து திரிகின்றனர். அவர்கள் தமிழர் நிலங்களிலேயே படுகொலை செய்யப்பட்டு எலும்புக் கூடுகளாக கிடக்கின்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

அத்துடன் முடிந்து விடவில்லை இன்றும் தடுப்பு முகாங்களுக்குள் மக்களை வைத்தும். மீள் குடியேற்றம் செய்து 100 மிற்றருக்கு ஒரு காவலரண்களை அமைத்தும். சுற்றிவளைப்பு என்று வீடுகளுக்குள் வருவதும், விசாரணை என்று சொல்லி அவர்களை இராணுவ முகாம்களுக்கு அழைப்பதும் மக்களை அல்லல் படுத்தியும் துன்பப்படுத்தியும் வருகிறான். இரவில் தனியாக படுக்க முடியாது. இரண்டு, மூன்று குடும்பங்கள் ஒரே வீட்டில் படுப்பது அல்லது அடுத்த கிராமங்களுக்கு சென்று உறவினர் வீடுகளில் படுத்து வருவது இப்படியே இன்னும் சொந்த ஊரிலேயே அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறு வாழுகின்ற மக்கள் விசாரணை என்ற பெயரில் கொண்டு செல்லப்படுகின்றனர். இரண்டு, மூன்று நாட்களின் பின் கொண்டுவந்து விடப்படுகின்றனர். நாளாந்தம் சித்திரவதை செய்தும் அவர்களை தாம் செய்த கொடுமைகளை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி வருகின்றான். மக்கள் படும் வேதனைகளையும் இவர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் சர்வதேச நாடுகளோ, சர்வதேச அமைப்புக்களோ திரும்பிப் பார்க்கவில்லை. என்பது வேதனைக்குரிய விடயமாக இருப்பதோடு அல்லற் படும் மக்களின் மனவேதனையை அதிகரிக்கச் செய்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட இளைஞர், யுவதிகளையும், போராளிகளாக சரண் அடைந்தவர்களையும், பதிந்துவிட்டு உடன் விடுகின்றோம் என்று சொன்னவர்களுக்கு புனர்வாழ்வு முகாமில் என்ன நடக்கின்றது. தம்மை உழைத்துப் பாக்கவேண்டிய கணவர் வருவாரா என்றும், அப்பா வருவாரா என்று பிள்ளைகளும், பிள்ளைகள் வரமாட்டார்களா என பெற்றோரும் ஏங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

புனர்வாழ்வு முகாம் என்ற போர்வையில் சர்வதேச விதிகளுக்கு முரணாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு பல சித்திரவதைகளையும், உளரீதியான தாக்கங்களையும் அனுபவித்து மனநிலை பாதிக்கப்பட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன்… என்ன நடக்கிறது என நேரடியாக   அணுவப்பட்ட அணுபவங்களையும் தற்போது தொடர்கின்ற திட்டமிட்ட சித்திரவதைகளின்  தகவல்களையும்  சிங்கள பேரினவாதத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்துகிறோம்.

இது தொடர்பான உண்மை சம்பவங்களை உங்களிடம் இருந்தால் அனுப்பி வைக்கவும் அவை உறுதிபடுத்தப்பட்ட பின்பு இணைத்து கொள்ளப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு 

 epress83@yahoo.com