24.12.1987 புரட்சித்தலைவர் MGR அவர்களின் நினைவுதினம்

மண்ணில் உன் பொன்னுடல் மறையலாம்

விண்ணிலே உன் உயிர் வாழலாம்

எங்கே நீ சென்றாலும் என்றும் எம் நினைவுகள் உன்னோடுதான்

இருந்தாலென்ன மறைந்தாலென்ன

இவர்போல யாரென்று

ஊர் சொல்ல வேண்டுமென

நீ சொன்ன வார்த்தைகளுக்கு

உனக்கே நீ உயிர் கொடுத்தவன் அல்லவா!

மீண்டும் மீண்டும் உன் நினைவுகளை நிதம்

மீட்டவேண்டும் என்பதற்காய்

நீ செய்த காரியங்களை நினைந்து

ஈழத்தமிழர்கள் தலை வணங்கி நிற்கின்றார்

ஈன் இரக்கங்களின்றி

ஈழத்தமிழர்களுக்கு

ஈனக்கொடுமை செய்யும்

அரக்கர்களின் கொட்டமடக்க

இன்றுவரை நீ வாழ்ந்திருக்க வேண்டுமென

தணலாய்காய்ந்து நிற்கும்

தமிழர்கள் நின் நினைவுகள் சுமந்து

நிதம் நிற்பது நிதர்சனம்

மக்கள் திலகம் MGR இன் மாறா நினைவுகளுடன்

-‘தணல்குழுமம்