தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கட்டி வளர்த்தது எம் பெரும் தலைவன் பிரபாகரன். அவரை தலைவர் என்றே உலகத்தமிழினம் அழைத்தது. அவர் தனியே நின்று போராடாமல் தன் மனைவி, ஒரே மகள், இரு புதல்வர்கள் முதற் கொண்டு தன் உயிரினும் மேலாக மதித்த தமிழீழப் போராட்டத்தை “2000 வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய அருந்தலைவன்” என்று கி.ஆ.பெ.விசுவநாதம் அழைத்த தலைவராக இந்தப் பூமீப்பந்தில் போராடினார். இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். நெப்போலியன் சொன்னவாறு நான் ஒரு லட்சம் பேருக்கு சமன் என்னிடம் 50ஆயிரம் படைவிரர் இருக்கின்றார்கள் என்ற கருத்தின் பொருளாக உலகத்தமிழர்களின் ஏக தலைவனாக சிங்கள அரசிற்கு சவால் விட்டார். 

யுத்ததங்கள் பல புரிந்தார். ஆனையிறவுச் சமரின் பின்பு இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளும் பிரபாகரனின் படைகள் மரபு வழி இராணுவம் என்ற கோட்பாட்டின் கீழ் ஏற்றுக் கொண்ட ஒரு படையை வழிநடாத்தினார். அதனிலும் மேலாக கடற்படை, விமானப்படை போன்றவற்றையும் நிறுவி தமிழர்கள் உலகத்தின் மற்றைய எந்த இனத்திறகும் சளைத்தவர்கள் அல்ல என்ற சமன்பாட்டை கட்டி எழுப்பினார். உலக வல்லரசுகள் அனைத்தும் அவரை ஆசை காட்டி வளைத்தார்கள் யாராலும் ஏமாற்ற முடியாத ஒரே தலைவனாக உலக சரித்திரத்தில் இடம் பிடித்தார் எம் தலைவன். 

பல உலக நாடுகளும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயந்கரவாதப் போராட்டமாக பிரகடனப்படுத்தின. ஏதற்குமே அஞ்சாத தலைவன் தமிழ் ஈழ இலட்சியத்தினையே தனது இலக்காகக் கொண்டு இம்மியளவும் அசையாது வீரஞ்செறிந்த போராட்டத்தை நடாத்தினார். இந்திய வல்லரசு ஒரு குட்டிநாடான தமிழ் ஈழத்தை அகண்ட தமிழ்நாடு என்ற கற்பனையின கீழ் அன்று தொடக்கம் இன்றுமே எதிர்த்தது. இந்தியப்படைகள் ஈழ மண்ணில் போர் புரிந்த போது அவர் நம்பியிருந்த பல தலைமைப் போராளிகள் இயக்கத்தை விட்டு விலகிய போதும் மனம் தளராது படை நடாத்தி இராசதந்திர முறையிலும் அவர்களை வெளியேற்றி இந்தியப் படையுடன் தமிழ் மக்களின் சிறு படை போராட்டம் நடாத்த முடியாது என்ற விதியை பொய்யாக்கினார். 

இந்திய உளவுப்படைகள் இயக்கத்தின் இரண்டாம், மூன்றாம் தரத்தளபதிகளை ஆட் கொண்டு இயக்கத்தில் பிளவை உண்டு பண்ணிய போதும் வீரஞ்செறிந்த நெஞ்சுடன் போர்க்களத்தில் நிலை கொண்டிருந்தார். இந்தியாவின் சகல எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழர்களின் அரசொன்றை நிறுவிக் காட்டினார். நடுநிசியிலும் பெண்ணொருவர் அச்சமின்றி பயணம் செய்யக் கூடிய நாடுகளில் ஒன்றாக உலகப் புகழ் வாய்ந்த எழுத்தாளர்களால் புகழாரம் சூட்டப்பட்ட நாடாக தமிழ்ஈழத்தை கட்டி எழுப்பினார். 

எல்லாவற்றிற்கும் மேலாக உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் வெளியேறி போராட்டத்திற்கு பக்க பலமாக இருக்க கூடியதான விடுதலைப் போராட்டத்தை நடாத்தி எமக்கெல்லாம் மேற்குலக நாடுகளில் வசதியான வாழ்வுக்கு வழி சமைத்தார். புகலிட தேசங்களை வந்தடைந்த தமிழர்களும் நன்றி மறவாது தலைவனை வாழ்த்தினர். வணங்கினர். இவ்வாறு 37 வருடங்கள் எம்மை எல்லாம் வழிநடத்திய தலைவனின் போராட்டம் ஒரு திட்டமிட்ட சதியின் வழியே பின்னடைவைச் சந்தித்தது என்பது வரலாறாகிவிட்ட நிலையில் புகலிடத் தமிழினம் என்ன செய்கின்றது என்பதுதான் சிந்திக்க வேண்டிய முக்கிய விடயமாக இன்று நம்முன் விரிந்து கிடக்கின்றது. 

தலைவரின் நம்பிக்கையைப் பெற்று அவருடன் 20 வருடங்களாகத் தோளோடு தோள் நின்று போராடிய தமிழர்களில் பலர் ஒன்று சேர்ந்து நாடு கடந்த தமிழிழ அரசு என்ற அமைப்பை நிறுவி போராடுகின்றார்கள். மக்களுக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகப் போராடும் இச்சந்தர்ப்பத்தில் 2009 மே 19ன் பின்னர் தம்மை தான் தலைவர்களாக நியமித்துக் கொண்டு நீண்ட அனுபவம்மிக்க, தலைவருடன் ஒன்றாகத் தோள் கொடுத்தவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கின்றார்கள். 

இவர்கள் தான் நாடு கடந்த தமிழிழ அரசின் தோற்றத்தை விரும்பாதவர்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள். தமிழத்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சில பேருக்கு “தலைப்பாகை கட்டி “ களத்தில் இறக்கிவர்கள். இன்னும் தமது நண்பர்களின் இணையத் தளங்கள் ஊடாக தமிழ்த் தேசத்தின் விடுதலைப் பாதைக்கு எதிராக “தானும் உண்ணாது மற்றவனையும் உண்ண விடாது “தடுக்கின்றார்கள். அந்தக் கோஸ்டி குழுவாதத்திற்கு தலை தாங்குபவர்களை தமிழ் தேசியத்தின் உண்மையான நெஞ்சங்கட்கு அடையாளம் காட்ட வேண்டிய கட்டாய காலத்தில் நாம் இருக்கின்றோம். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பின் பொருள் விளங்காது சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்பவர்களை மக்கள் விரட்டியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. 

                                        “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”