குருதியும் வடுக்களும் ஏற்பட்டதேன்?

அகிம்சையும் மனிதமும் மரணித்ததன் காரணமே.

அறப்போரின் தோல்வியே காரணமாக இருந்தால் குருதியும் வடுக்களும் தோன்றாதிருந்திருக்கும்.

அதுவே அடிமைத்தன வாழ்வின் தோற்றுவாயாய் இருந்திருக்கும்.

அடிமை வாழ்வு தொடர்ந்திருந்தால் ஈழப்பாவைகளின் முலைகளில் சிங்கள வாரிசுகள் இன்றுவரை பால்குடிக்கும்.

தன்மானத் தமிழர் சிலர் விடுதலையின்பால் கொண்ட வேட்கையே ஈழத்துக் குருதி சிந்தல்.

ஓவியர் புகழேந்தி தூரிகை மூலம் மனிதநேய விரும்பிகளின் மனத்திரையில் கீறமுனையும் செய்திச் சித்திரமும் இதுதான்

கனகசபை தேவகடாட்சம்

திருக்கோணமலை

trincokadatcham@yahoo.com 

ஓவியர் புகழேந்தியின் ஓவியக்கண்காட்சி இம்மாதம் 12 ம் திகதி தமிழகத்தில் நடைபெறுவதையிட்டு ஒரு செய்தி.

http://www.oviarpugazh.com/