இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே  இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது என் Act Now நம்புகின்றது. 

புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் – இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களும் உங்கள் கரங்களிலேயே… தொடர்த்து போராடுவோம்.

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக .நா சபையின் கீழ் ஒரு கருத்துக்கணிப்பெடுப்புக்கு முயற்சி எடுப்பதே தமிழ் ஆவலர்களதும் அவர்களின் தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களினதும் தலையாய இலக்காக இருக்க வேண்டும். ஏன்?

தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு மக்களின் கருத்து கணிக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடு முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் இருந்த தேசங்களின் ஒன்றியத்திலும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஐ.நா சபையிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வகையிலான கருத்துக்கணிப்புக்களுக்கு வலுவுள்ள வகையிலான இராஜாங்க அழுத்தங்களை மேற்கத்தைய நாடுகள் கொடுத்தமைக்கான வரலாறு உண்டு. உண்மையிலேயே சுயநிர்ணய கோட்பாடு  ஐ.நா சபையின் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் இவ்வகையிலான  கருத்துக்கணிப்புக்கள் கொசோவோவிலும் மொன்றிநிகிரோவிலும் கிழக்கு திமோரிலும் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் அமைப்பதிற்கான கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் எப்போதுமே இடமளிக்காது என்றும், அது ஒரு யதார்த்தமற்ற விடயம் எனவும் சர்வதேச சமூகம் கருதுகிற போதிலும் வடக்கு கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களின் அரசியல் யாப்பு ரீதியான எதிர்கால நிலையினைத் தீர்மானிக்க கருத்துக்கணிப்பீடு  நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மிகுந்த அனுதாபம் ஏற்படும். இதனை இலங்கை அரசு தட்டிக் கழிப்பது கடினம். இதனை எவ்வாறு அடையலாம் ?

ஒரு கருத்துக்கணிப்பை நடத்தச் செய்ய ஒரு உபாயம் உண்டு. அதற்கு ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள பொருளாதார அரசியல் ரீதியான ஆதரவு திரட்டுதல் வேண்டும்.

பல்வேறு காரணங்களிற்காக சர்வதேச சமூகம், கடந்த வைகாசி மாதம் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தயங்கியது. இலங்கை தனது அண்டைய நாடு எனக் காரணம் காட்டி, உள்நாட்டுப் பிரச்சினையில் மேற்க்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது என இந்தியா கோரிக்கை இட்டது. அத்துடன், இலங்கையின் இராணுவ நடவடிக்கைக்கு ஒத்தாசை அளிக்காவிடின் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து விடும் என அஞ்சியது. (அத்துடன் பிரிவினைவாதத்திற்கு பொதுவான ஒரு அச்சம் நிலவியது). இவர்கள் அனைவரது கைகளிலும் இரத்தக்கறை படிந்து உள்ளது. இவ்வாறான போக்கை எப்படி மாற்றலாம்?

கருத்துக்கணிப்பிற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற, தமிழர்கள் தற்போது நடாத்தப்படும் விதமும், எதிர்காலத்தில் நடாத்தப்படப் போகும் விதமும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்பதனை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளச் செய்தல் வேண்டும். அதன் பின்னர் அதற்காக தீர்வு வாக்கெடுப்பு  என அவர்கள் ஏற்க வேண்டும்.

கொடூரமாக்குதல் 

முதலாவதாக புலிகளையும் பின்னர் தமிழர்கள் யாவரையும் எவ்வாறு இலங்கை அரசு கொடூரமானவர்கள் எனக் கருதியதோ, அவ்வாறு இலங்கையையும் ஒரு கொடூர நாடாகக் கருதச் செய்தல் வேண்டும். இலங்கை அரசின் மனித உரிமை மீறல் தொடர்பான தொடர் பதிவுகளைப் பார்க்குமிடத்து இது கடினமான விடயம் ஆகாது. அதாவது,யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடைபெற்ற போர்க்குற்றங்களை எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்தல், எண்ண முடியாத அளவு இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தத் தவறியமை, குடும்பத்தை அதிகாரத்தில் அமர்த்த எடுக்கப்படும் சர்வாதிகார நகர்வுகள், பொதுப்படையான மனித உரிமைகளை மீறுதல் முதலியன இதற்கு பயன் படுத்தக் கூடியதாக இருக்கும்.

இராணுவ நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன்னர் ராஜபக்ஷ சர்வதேச சமூகத்துடன் இணங்கிக் கொண்ட பல விடயங்களிற்கு முரணாக செயற்பட்டுள்ளார். கொடுக்கப்பட்ட உறுதிகள் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளுச்குள் நிறைவேற்றாத நிலைமை, குடிமக்களை பாரிய ஆயுதங்களால் தாக்கியமை, கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்தமை, வன்னித் தமிழர்களைச் சிறைப்படுத்தி வைத்தமை போன்ற குற்றத்திற்கு சர்வதேச சமுகத்திற்கு இலங்கை பதில் சொல்லியே ஆகவேண்டும். இவற்றிற்காக போர்க் குற்ற விசாரணை நடத்தப்படக் கூடிய வாய்ப்பும் அரசியல் தீர்வு ஒன்றை காணக்கூடிய அறை கூவலுக்கு இட்டுச்செல்ல வழியும் உள்ளது. தமிழ் சமூகத்துடன் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடாத்த மாத்திரமின்றி தமிழர்களுடன் ஒழுகும் முறையினை இலங்கை மாற்றிக்கொள்ளாது என்பதை சர்வதேச சமூகம் விளங்கிக்கொள்ளும். அரசியல் அழுத்தமின்றி இவற்றைச் செய்ய முடியாது என்பது அவர்களுக்குப் புலப்படும். அழுத்தம் கொடுப்பது எப்படி?

அழுத்தம் கொடுத்தல் 

இரண்டாவதாக, பல்வேறு அரசாங்கங்கள் இலங்கை மீது அரசியல் பொருளாதார தடைகளைக் கொண்டுவரவேண்டும் என வேண்டி நிற்றல், வர்த்தக விளையட்டுதுறைத் தொடர்புகளை நிறுத்துதல், அத்துடன் பொது நலவாயத்தின் அங்கத்தில் இருந்து இடை நிறுத்தி அந்நாடுகளிற்கு பயணம் செய்ய பிரயாண-அனுமதி (விசா) கொடுப்பதை நிறுத்துதல், இராஜாங்க ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தல். இந்த நடவடிக்கை பொதுவாக பொதுசனத்தை பாதிக்கும் எனினும் அரசியல் தனிமைப்பீடத்தில் உள்ளவர்களை குறிப்பாக தண்டிக்கும். இவ்வழிமுறைகளைக் கடினமாக்குவதன் மூலம், ஐ.நா சபையின் மேற்பார்வையின் கீழ் கருத்துக்கணிப்பு ஒன்றை நடாத்துவதற்கு இலங்கை அரசு முன்வரும் வரை அந்நாடு சர்வதேச அரங்கத்தில் ஒரு கீழ்த்தர நாடாகக் கருதப்படவேண்டும் .

இவ்வகையாக இலங்கை அரசுக்கு வெளியில் இருந்து அரசியல் அழுத்தங்களை கொடுத்து அந்நாட்டிற்கு எதிரான செயல்வலுவுள்ள ஒரு பொருளாதார யுத்தத்தை நடத்துவதன் மூலம் அந்நியச்செலவாணி பற்றாக்குறையை ஏற்ப்படுத்தி நேரடிப் பொருளுதவி செய்வதை தடுக்கக் கூடியதாக இருக்கும். வெற்றிகரமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு அழுத்தம் ஏற்படுத்துவதன் மூலம் அதன் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானத்தைக் குறைத்து இலங்கை அரசு இராணுவத்தை போசிப்பதையும் உபகரணங்கள் வழங்குவதையும் மட்டுப்படுத்தவும், அதே வேளை அரசு சமூக  கட்டமைப்புக்களிற்கான செலவையும் வரையறுக்கவும் வேலைவாய்ப்பின்மையை அதிகரிப்பதன் மூலம் சாதாரண வாழ்க்கைத்தரத்தை குறைக்கவும் முடியும். இதன் மூலம் சிங்கள மக்கள் மாற்றம் ஒன்றிற்கான கோரிக்கையினை அரசு மீது வைக்க நேரிடும். இதனை எவ்வாறு செய்வது?

நீங்களே சிந்தியுங்கள்! தீர்வுக்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டியது ஒவ்வொருவரினது கடமையாகும். 

நன்றி act-now