வன்னி நிலப்பரப்பில் தமிழருக்கெதிராக நடந்த கொடூரத்தின் உச்சமாக கருதப்படும் சிங்களத்தின் அகோரங்களை பாகம் பாகமாக BBC Channel 4 தொலைக்காட்சி தந்திருந்தது.

 ‘காணாமல் போனவர்கள் மீண்டும் எம்மிடம் வந்துவிடுவார்கள்என்ற எண்ணத்தோடு பெற்றோர்களும் உறவினர்களும் அதீத நம்பிக்கையுடன் சாத்திரத்தின்மேலும், ஆலயங்களில் பூக்கட்டிப் பார்ப்பதிலும், கனவுகளிலும் இன்னோரென்ன ஐதீகங்களில் இன்னமும் நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில், மல்லாவியைச் சேர்ந்த விருத்தன் என அழைக்கப்படும் தமிழ்மகனின் மரணம் அவர்களிற்கு எந்த அளவு வேதனையைத் தந்துகொண்டிருக்கும்?  கற்பனையில் தானும் காணமுடியாதவை

மல்லாவி விருத்தன் போன்று ஆயிரமாயிரம் உறவுகளின் மரணங்கள் காலப்போக்கில் வெளிச்சத்திற்கு வந்து உறவினரின் தேடுதல்களுக்கு முற்றுப்புள்ளியாக அமையப் போகிறதோ

முடிவில்லா மரணங்களின் சேதி, தொடர் அழுகை ஓலங்களோடு தொடர்கதையாகப் போகப்போகின்றதா?

நெஞ்சு கனக்கிறது.  

இந்த அரச பயங்கரவாதத்தின் ஆதாரங்கள், மனித உரிமை அமைப்புக்களாலும், ஊடகங்களாலும் ஆவணங்களாக போதுமான அளவு சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும், இன்னமும் சர்வதேச நீதிமன்றின் முன்னால் நிறுத்துவதற்கு புத்திஜீவிகள் புறப்படவில்லை என்றால் ஆறிய கஞ்சி பழங்கஞ்சிஆகிவிடுமோ? என்ற நினைப்பு வேதனைத் தீயில் தள்ளுகிறது

தமிழீழத்தில் மானிட நேயத்தின் மரணிப்பைஉலக நாடுகளின் கவனத்திற்கு திருப்ப வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடப்பாடு.

-தசக்கிரீவன்-

மேலும் அறிய கீழே சொடுக்கவும்

virunthan 2

Thanal