தமிழ் இலக்கியக் கூட்டங்களில் என்றாலும் சரி, வேறு தமிழ் சார்ந்த கூட்டங்களில் என்றாலும் சரி, பண்பாடு என்ற பதம் அடிக்கடி பாவிக்கப்படுவதை நாம் அறிவோம். “பண்பாடு” என்பதற்கு சரியான விளக்கங்கள் இன்றி எழுத்தமானதாக இச்சொல் பாவிக்கப்படுவது வேதனையை தருகிறது.

பண்பாடு என்பது ஒரு இனத்தின் வாழ்க்கை நெறி, கலைகள், வரலாறு பொருண்மியம், வாழ்விடம் முதலான பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.

இது பற்றி தனிநாயக அடிகளார் பின்வருமாறு குறிப்பிடுவார். “பண்பாடு” என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகசட்டங்கள், ஆலயங்கள், வழிபாட்டுமுறைகள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்தினை, புறத்திணை மரபுகள், இலக்கியமரபுகள், அரசியல் அமைப்புக்கள், ஆடைஅணிகலன்கள், திருவிழாக்கள், உணவு முறை, பொழுது போக்குகள், விளையாட்டுக்கள் ஆகியவற்றை எல்லாம் குறிக்கும்.

தமிழ்மொழி பேசும் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு நாகரீகமிக்க சமூகமான வாழ்ந்திருந்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. “பண்பாடு” கொண்ட வாழ்க்கையே ஒருநாகரீக வளர்;சியின் பிரதிபலிப்பாகும். குமரிக்கண்டம் (லெமோரியா) பற்றியும், சிந்துnளி நாகரீகம் பற்றியும் உலகம் உண்மையை ஏற்றுக்கொண்டதை நாம் அறிவோம். கண்டத்தோடு இணைந்திருந்ததுதான் ஈழம் கடல் கொண்டதன் பின்னர் தமிழகத்திலிருந்து ஈழம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் 50 ஆயிரம் வருடங்கள் பழமைகொண்ட தமிழ்மொழி அலங்கையிலும் இருந்திருக்கின்றதென்பதற்கு அறிவியல் அடிப்படையிலும் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஊடாகவும் தற்போது சான்றுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உலக நாகரீக இனங்களுள் மிக முந்திய நாகரீக மிக்க இனம் தமிழினம் என்பதை நிலைப்படுத்த சான்றுகள் முன்பே கிடைத்துள்ளன. இவ்விடயத்தில் முற்றாக விளங்கிக்கொண்ட எமது இன இளைஞர்கள் இறுதிவரை போராட்டத்தில் முழு வீரியத்தோடு நின்றிருந்தார்கள். இருப்பினும் தமிழர்களிடம் விழிப்பின்மையாலும், தமிழர்களின் விழிப்பின்மையாலும், அளவுக்கு மீறிய தன்னடக்கத்தினாலும், வரலாறுகளை கற்கும் ஆர்வமில்லாகையினாலும் தமிழர் சிறப்புக்களை தெரியப்படுத்தாமலும் மங்கிப்போய்க் கொண்டிருக்கிறது. இது இறுதியில் ஏனைய இனங்கள் மத்தியில் அடிமைச் சீவியத்தினுள் சிறப்பட்டுப் போகும் நிலை ஏற்படலாம்.

சங்க காலங்கள்

தமிழ் புலவர்களும், அறிஞர்களும் ஒன்றுகூடி அரசனின் தலையில் தமிழ்மொழியை வளர்த்த அரங்கமே தமிழ் சங்கமாகும்.

முதற்சங்கத்தில் 4449 புலவர்கள் 4440 ஆண்டுகள் காலமிருந்து தமிழ் வளர்த்தனர். அச்சங்கத்தில் 549 புலவர்கள் உறுப்பினராக இருந்தனர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன. இச்சங்கத்தை மாகீர்த்தி என்னும் பாண்டிய மன்னன் வழிநடாத்தினான். முதற்சங்கபுலவர்களாக அகத்தியர், சிவபெருமான், குமரவேள், முரஞ்சியூர், முடிநாகராயர் முதலான புலவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பது அறியக்கிடக்கிறது.

இரண்டாவது சங்கம் முதற்சங்கத்தின் அழிவின் பின்னர் பலநூறு ஆண்டுகளுக்கும் பின்னர் கபாடபுரத்தில் தொடங்கப்பட்டது. 3700 ஆண்டுகாலம் நீடித்ததோடு 3800 புலவர்கள் சங்க உறுப்பினர்களாக செயற்பட்டனர். இச்சங்கத்தில் 09 புலவர்கள் சங்க உறுப்பினர்களாக செயற்பட்டனர். இச்சங்கத்தில் கலியும், குருகும், வெண்டாரியும், வியாழமலையும், அகவலும், அக்தியமும், தொல்காப்பியமும் இயற்றப்பட்டன.

இரண்டாம் சங்கம் அமைந்திருந்த கபாட புரம் ஆழிப்பேரலையால் அள்ளுண்டு போக அதிலிருந்து தப்பிய முடத்திருமாறன் என்ற மன்னன் மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கத்தை ஆரம்பித்தான். இச்சங்கம் 1850 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. இக்காலத்தில் 449 புலவர்கள் வாழ்ந்தனர். 49 புலவர்கள் உறுப்பினர்களாக செயற்பட்டனர். இச்சங்கத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் அகம், புறம் தொடர்பான தொகை நூல்களும் கூத்தும், வரியும் சிற்றிசையும் பேரிசையும் போன்றவையின் தொடக்கமாக பல நூல்கள் தோன்றின. இக்காலத்தில் தொல்காப்பியம் இலக்கணநூலாக போற்றப்பட்டுள்ளது.

இப்படி ஏராளமான சான்றுகளுடன் நிறுவமுடியும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நெறியோடு, கல்வியறிவோடு தமிழர் சமூகம் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் நிலையான சிறந்த பண்பாட்டு வாழ்வியல் முறை கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தனை சிறப்புக்களையும்கொண்ட தமிழர் குறிப்பாக இலங்கையில் 2500 வருடங்களுக்குள் விஜயனின் வருகைக்குப் பின்னர் தோன்றிய இனத்திற்கு அடிமைகளாகவும், சொந்த நாட்டிலே எதிரிகளாகவும், காணிகளற்று, வீடுகளற்று கையேந்தும் சமூகமாக வாழும் நிலை ஏற்பட்டு விட்டதை மீட்டிப்பார்க்கும் போது இதயமே வெடித்து விடும் போல் உள்ளது.
இந்த நிலையிலிருந்து எப்படி மீண்டெழ வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். அதற்கு,

 வரலாற்றை அறிதல்
 தெளிவாவும் துணிவாகவும் பிரச்சாரப்படுத்தல்.
 அடுத்த இளம் சமூகத்தினருக்கு திரிபுகளின்றி வரலாற்றை கற்பித்தல்.

இவைகளே இதற்கான முதல்வழிகள் எனக்கருதுகிறேன்.

கனகசபை தேவகடாட்சம்
தொடர்புகட்கு: 0094766669386