திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்மாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அலையென திரண்டிருந்த மக்களின் கண்ணீருக்கு மத்தியில், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதான ஈகைச்சுடரினை மாவீரர் லெப்டினல் கேணல் குஞ்சர் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்ததன் பின்னர் மாவீரர்களின் பெற்றோர்களாலும், உறவினர்களாலும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

நன்றி தமிழ்வின்