ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் தற்போது 32ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நேற்று இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் 2009 ம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் தற்பொழுதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும்

இனப்படுகொலைகளுக்கும் மனிதவுரிமை மீறல்களுக்கும் நீதி வேண்டி உலக நாடுகள் கூடி மனிதவுரிமை மீறல்களை ஆராயும் ஜெனீவாவிலுள்ள ஐக்கியநாடுகளின் மனிதவுரிமைச் சபையின் முன்பாக பேரணி ஒன்றை நடாத்தினர்.

இந்த பேரணியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்ற கோசத்தை இந்த உலகின் காதுகளில் கேட்க்கும்படி உரக்க கூவினர்.

மதியம் 2 மணிக்கு ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அண்மையில் இருந்து ஆரம்பித்த பேரணி 3 மணியளவில் ஜெனீவாவிலுள்ள ஐ. நா. முன்றலை வந்தடைந்தது.

புரட்சிப் பாடல்கள், பேச்சுக்கள், நடனங்கள் போன்ற நிகழ்வுகள் ஜெனீவாவிலுள்ள ஐ. நா. முன்றலில் நடைபெற்று பிற்பகல் 5 மணியளவில் பேரணி நிறைவுக்கு வந்தது.

UNO-14

UNO_1

UNO_6

UNO_2

UNO_4

UNO_7

UNO_8