1890 முதல்..நீண்ட காலமாக எரித்திரியாவும்,எத்தியோப்பியாவும், இத்தாலியின் ஆட்சிப் பிடியில்தான் இருந்து வந்தன..ஆனால்..இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியிடம் இருந்து சுதந்திரம் பெற்ற எதியோப்பியா, ,எரித்திரியாவானது எத்தியோப்பியாவின் ஓர் பகுதி என்று சொல்லி பலாத்காரமாக எரித்திரியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது!

அதற்கு முன்னர் எரித்திரியா 1951 முதல் பிரிட்டனின் பராமரிப்பு நாடாகவே(British protectorate) இருந்து வந்தது என்பது குறிப்பிடத் தக்கது! ஆயினும், பிரிட்டனுக்கு பின்னர் எரித்திரியர்களின் நிலை என்ன? என்ற ஓர் கேள்வி எழுந்தபோது, பிரிட்டிஷ் அரசு ஓர் ஆலோசனையை அப்போது சொன்னது..அதன்படி,மத ரீதியாக எரித்திரியாவை இரண்டாகப் பிரித்தது!

1. அங்குள்ள கிறிஸ்தவர்கள் எதியோப்பியாவுடன் சேர்ந்து இருக்கவும்..

2. முஸ்லிம்கள் சூடானுடன் சேர்ந்து இருக்கவேண்டும் ..
என்பதுதான் அவை!

எரித்திரியர்களின் சிறகுகள் வெட்டப்பட்ட நாட்கள் அவை என்று இதைச் சொல்லிவிடலாம்! அல்லது பிரிட்டிஷ் காரரின் பிரித்தாளும் சூழ்ச்சி இதுவென்று கூட சொல்லிவிடலாம்!

ஈழத்தை சிங்களவர்கள் 1948 சுதந்திரத்துக்குப் பின்னர் எப்படி
தம்முடன் மட்டும் வைத்துக் கொண்டனரோ அப்படித்தான் இதுவும் இருந்தது!..எத்தியோப்பியாவின் சர்வாதிகாரப் போக்கு, ஒரு காலத்தில் தனித்து ஆட்சி செய்த எரித்திரியர்களை -அவர்களின் சுதந்திர தாகத்தை சிறிது சிறிதாக எரியச் செய்தது!

ஆனால்,கம்யூனிச நாடு என்னும் நிலையில் இருந்த சோவியத் யூனியனானது,எத்தியோப்பியர்களின் சர்வாதிகாரத்துக்கு எரிபொருள் ஊற்றிக் கொண்டிருந்தது நீண்ட காலமாக!

இலங்கைக்கு அருகில் உள்ள நாடு என்ன செய்கிறதோ-செய்ததோ, அதைத்தான் அன்று சோவியத் யூனியனும் செய்து வந்தது.எரித்திரியாவை அபகரித்த எதியோப்பியாவுக்கு வேண்டிய ஆயுதங்களையும்,நாசம் செய்யும் இரசாயன ஆயுதங்களையும், அன்று தேவையான அளவு வழங்கி வந்தது!

ஆயினும்..1980 களில் சோவியத் யூனியன் பல துண்டுகளாய் உடைந்து போனபோது,ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது..அதன் விளைவாக 80 களில் எதியோப்பியாவுக்கு உதவுவதை ரஷ்யா நிறுத்திக் கொண்டது!

1961 முதல் 1991 வரை நடந்த எரித்திரிய விடுதலைப்
***********
போராட்டம்!
***********
ஒரு காலத்தில் தன்னாட்சி அதிகாரம் கொண்டிருந்த எரித்திரியா, எத்தியோப்பியர்களின் கையில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வரத் தொடங்கியபோதே1961இல்,எரித்திரிய மண்ணில் இருந்து விடுதலைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.எரித்திரிய விடுதலை முன்னணி( E.L.F),என்ற ஆயுதப் போராட்ட அமைப்பு எரித்திரியாவின் விடுதலைக்காக ஆயுதப் போரைத் தொடங்கியது.
1.9.1961 இல் Hamid Idris Awate என்ற போராளித் தலைவரும் போராளிகளும்,எதியோப்பிய நாட்டுக்கு எதிரான முதல் சண்டையை ஆரம்பித்து வைத்தனர்.

ஆரம்பத்தில் போராளிகளுக்குள் ஏற்பட்ட சண்டைகளும் ,பிளவுகளும்,எத்தியோப்பிய அரசின் உளவாளிகளின் ஊடுவல்களும் அந்த அமைப்பை பிளவு படுத்தியது.அதில் இருந்த பல உறுப்பினர்கள்,1970 களில் ஐரோப்பியா போன்ற நாடுகளிலும்,காடுகளிலும் தஞ்சம் அடைந்தனர்.

ஆயினும், கூடிய கெதியில் மீண்டும் எரித்திரியாவுக்கான விடுதலைப் போராட்டம் துளிர் விடத் தொடங்கியது!
எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி என்னும் அமைப்பு(E.P.L.F) 1977 இல் முந்திய எரித்திரிய விடுதலை முன்னணியின் பல உறுப்பினர்களோடு,
பல உறுப்பினர்கள் வெளியேறியபோதும் ,ஆரம்பிக்கப் பட்டது! அந்த போராட்ட அமைப்பின் முதல் செயலாளர் நாயகமாக ,Ramadan Mohammed Nour என்பவர் இருந்தார்!

எதியோப்பியாவுக்கு 1974இல் இருந்து சோவியத் யூனியனின் முழு ஆதரவு கிடைத்தது!ஆயினும் 80 களில் சோவியத்தின் உடைவு, போராளிகளின் கரங்களைப் பலப் படுத்த தொடங்கியது!1978 இல் இருந்து 1986 வரை போராளிகளுக்கு எதிராக பல பலமான தாக்குதல்களை எதியோப்பிய அரசப் படைகள் நடாத்தி,போராளிகளுக்கு பலத்த உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியபோது,அதன் தலைமையும் போராளிகளும் காடுகளில் மறைந்து இருந்தனர்.

ஆயினும்,அவர்கள் 1988இல் மீண்டும் தம்மைப் பலமாக்கி கொண்டு எதியோப்பியப் படைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர்.

அதன் முதல் வெற்றியாக Afabet என்னும் நகரம் போராளிகளின் கையில் விழுந்தது!பின்னர் வடக்கு எரித்திரியாவில் அமைந்திருந்த , எதியோப்பிய இராணுவத் தலைமையகத்தை E.P.L.F தாக்கி கைப்பற்றியது! அடுத்து எரித்திரியாவின் 2வது பெரும் நகரமாகிய Keren ஐ, அது பெரும் சண்டைக்கு பின்னர் கைப்பற்றியது!

ஆயினும்,வன்னிச் சண்டையின் பொது 2009இல் இலங்கைப் படைகள் எப்படி இரசாயன ஆயுதங்களைப் பாவித்ததோ, அப்படியே எதியோப்பிய படைகளும் சில வகை இரசாயன ஆயுதங்களைப் பாவித்தன என்பது குறிப்பிடத் தக்கது!

1. மனிதர்களுக்கு அழிவை உண்டு பண்ணும் வாயு.
(Anti personnel Gas)

2. நேபாம் குண்டுகள்(Nepalm Bomps)போன்றவையே அவையாகும்!ஆயினும் அவற்றுக்கு எல்லாம் முகம் கொடுத்த எரித்திரிய மக்கள் விடுதலைப் போராளிகள், எதியோப்பியாவை நோக்கி தம் படையெடுப்பை தொடங்கிவிட்டனர்!

பொது வாக்கெடுப்பு!
**********
அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்பது ஆபிரிக்காவில் ,அதுவும் எரித்திரிய விடுதலைப் போராளிகளால்
நிரூபிக்கப் பட்ட அந்த நாளும் அன்று வந்தது.பனிப்போருக்குப் பின்னர் அமெரிக்க அரசு,வாசிங்டனில்,எரித்திரிய -எதியோப்பியப் போருக்கு முடிவு கட்டும் நோக்கில் பேச்சுவார்த்தையை தொடங்கியது. அதன் விளைவாக .. 01/04/1993இல் எரித்திரியாவிலும் ,சூடானிலும் எதியோப்பியாவிலும் வசித்த எரித்திரிய மக்கள் மத்தியில் ஓர் பொது வாக்கெடுப்பை நடாத்த எதியோப்பியா சம்மதித்தது!பொது வாக்கெடுப்பில் எரித்திரியா பிரிந்து செல்லவேண்டும் என்று 99.7% ஆன எரித்திரியர்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது!

அதன்படி எரித்திரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது !
சுமார் 30 வருடப் போரின் நிறைவாக,28.5.1993இல்,ஐக்கிய நாடுகள் சபை, தனது அங்கத்துவ நாடாக எரித்திரியாவை அங்கீகரித்தது!..எரித்திரிய சுதந்திரக் கொடி,வானில் பட்டொளி வீசிப் பறந்த நாள் அது!

ஓர் விடுதலைப் போராட்டம், ஆயுதம் மூலம் ஆபிரிக்காவில் விடுதலை அடைந்தன என்றால்,அவை சிம்பாவே வையும், ,எரித்திரியாவையுமே சாரும்!

பரிதாபத்துக்குரியவர்களாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும், எம்மை அழித்த சக்திகளிடமே அநுதாபம் தேடி எமது அரசியலை நகர்த்தலாம் என்று நினைப்பவர்களாகவும் இருப்பது சில தமிழ் அரசியல் வாதிகள் – உங்களுக்கு யாரை நான் குறிப்பிடுகிறேன் என்று தெரியும் – அவர்கள் செய்கின்ற துரோகத்தனத்தை விடவும் மோசமான துரோகம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

2009ம் ஆண்டுக்குப் பின்னர், முன்னரை விட மேலும் தெளிவாக, அமெரிக்காவும், பிரித்தானியாவும், இந்தியாவும் மற்ற வல்லரசுகளும் என்ன வகையில் இலங்கை தொடர்பாக கொள்கை வகுத்திருக்கிறார்கள் என்பது துல்லியமாக அம்பலமாகி இருக்கிறது. இதற்கு ஜோன் கெரி தொடக்கம் சமந்தா பவர் வரை என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது ஆதாரபூர்வமாக அம்பலமாகிக்கொண்டிருக்கிறது.

***விடுதலை அவாவி நிற்போர் ஒரு போதும் அவநம்பிக்கையோ,
சலிப்போ கொள்வதில்லை. பல்வேறு கோலங்களாக பல கட்சிகள் தோன்றிமறைகின்றன. “”ஒரு இருண்ட தினத்திலே மறு நாள்
வரை வாழ்ந்து முடிந்துவிட்டால் அத்தினம் தானாக கழிந்துவிடும்”” இதுவே இன்றய எம் மக்கள் மனநிலை***

தமிழீழம் என்பது வெறும் கனவல்ல…அதுவும், ஆயுதப் போராட்டம் மூலம்.. என்பது எரித்திரிய விடுதலைப் போர் நமக்கு கற்றுத் தந்த மிகச் சிறந்த பாடமாகும்!

– ஈழத்து நிலவன் –

Tamileelam