ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தின்  ஆசிய பசிபிக் நாடுகளுக்கு பொறுப்பான செயலாளர் அஜித் சுங்க்ஹாயிடம் இலங்கையின் வடகிளக்குப்பகுதிகளில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பின்வரும் விடயங்களை விளக்கி தமிழ் இனத்தின் விடுதலையில் ஆர்வம் கொண்ட பொதுமக்கள் என்ற ரீதியில் நால்வர் கொண்ட ஒரு குழுவாக நாம் 19.03.2014  நேற்று அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றை கையளித்திருந்தோம்.

1. காணாமல் போனோர் சம்பந்தமாக நடைபெறும் போராட்டங்களினூடாக உண்மைகள் வெளிக்கொணரப்படுவதை   நிறுத்துமுகமாகவும், அதற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்துவதற்காகவும் இப்போராட்டங்களில் முன் நின்று செயற்பட்டவர்களாகிய விஜயகுமாரி 55, சிறுமி விபூஷிகா 13, (இவர் ருதுவாகி பத்தே நாட்கள்) இவர்களை சட்ட விதிமுறைகளை மீறி  திட்டமிட்ட அப்பட்டமான பொய்க்காரணங்களைச் சோடித்து இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2. திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலயங்களை பௌத்த ஆலயங்களாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்  திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திலமைந்த தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று வணக்கஸ்தலமாகிய அகத்திய தாபனத்தை சிங்களப் பேரினவாதம் முற்றாக அழித்தது, மீண்டும் அப்பகுதி தமிழ் மக்களால் புனருத்தாபன ஆரம்பப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தது.

3. ஜெனிவா மனித உரிமை சம்பந்தமான மகாநாடு நடந்துகொண்டிருக்கும் தற்போதைய காலத்தில் கடந்த 14. 03. 2014 மாலை 4.30 மணியளவில் பக்கத்து சிங்களக்கிராமத்தில் வசிக்கும் ஒரு சிங்கள பௌத்த துறவியின் தலைமையிலான குழுவினர் இவ்வாலயத்தை சேதப்படுத்தி அழித்துள்ளனர்.

5. ஐநாவின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் உள்ள ஐநா மனித உரிமைக்கான தலைமையகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியான பங்குனி மாதம் 8 ம் திகதி இனவாத சிங்கள அரசினால் சம்பூர் மக்களை மீளக்குடியேற்றுவதாக கூறி விவசாய மற்றும் கடற்தொழில் வளம்மிக்க பிரதேசத்தில் வாழ்ந்த மக்களை வளம் ஏதுமில்லாத பிரதேசமாகிய இளக்கந்தை நோக்கிச்செல்லும் வழியில், இளக்கந்தைக் குளத்துக்கும் நாவலடிச்சந்திக்கும் இடையில் இருக்கும் காட்டுப் பிரதேசமான வேம்புக்காடு(வேப்படி) எனும் இடத்தில் மக்களைக் கொண்டுபோய் இறக்கிவிட்டிருக்கின்றார்கள்.

தமக்கு நேரப்போகும் அநீதியை உடனடியாக உணர்ந்த மக்கள் தங்களுடன் மீள்குடியேற்றத்திற்கு உதவியாக வந்த அரச அதிகாரிகளான பிரதேச செயலாளர்(மூதூர்) கொண்ட குழுவினரை எதிர்த்து வன்முறையில் ஈடுபட முற்பட்டபோது அவர்கள் மீள்குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு இராணுவத்தை துணைக்கு கூப்பிட அவர்கள் மக்களின் ஆவேச நிலையை கண்டதும் மீண்டும் அவர்களை அகதிமுகாமுக்கு அழைத்துச்சென்றிருக்கின்றார்கள்.

தபோது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐநா மனிதஉரிமைக் கூட்டத்தொடரில் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டிருக்கக்கூடிய கோரிக்கைகளில்(Petition) உள்ளடக்கப்பட்டுள்ளதா அல்லது புறந்தள்ளப்பட்டுவிட்டதா என்று பாதிக்கப்பட்ட மக்கள் விசனப்படுகின்றார்கள். பிரதேச அரசியல்வாதிகளும் மாவட்ட அரசியல் வாதிகளும் இந்தவிடயத்தை எந்தளவு கவனித்துக்கொண்டுள்ளார்கள்?

தணல் குழுமம்௦.

UN_Petition_6

UN_Petition_7

UN_Petition_1

UN_Petition_2

UN_Petition_3

UN_Petition_5

UN_Petition_4