ஐநாவின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் உள்ள ஐநா மனித உரிமைக்கான தலைமையகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியான பங்குனி மாதம் 8 ம் திகதி இனவாத சிங்கள அரசினால் சம்பூர் மக்களை மீளக்குடியேற்றுவதாக கூறி விவசாய மற்றும் கடற்தொழில் வளம்மிக்க பிரதேசத்தில் வாழ்ந்த மக்களை வளம் ஏதுமில்லாத பிரதேசமாகிய இளக்கந்தை நோக்கிச்செல்லும் வழியில், இளக்கந்தைக் குளத்துக்கும் நாவலடிச்சந்திக்கும் இடையில் இருக்கும் காட்டுப் பிரதேசமான வேம்புக்காடு(வேப்படி) எனும் இடத்தில் மக்களைக் கொண்டுபோய் இறக்கிவிட்டிருக்கின்றார்கள்.

தமக்கு நேரப்போகும் அநீதியை உடனடியாக உணர்ந்த மக்கள் தங்களுடன் மீள்குடியேற்றத்திற்கு உதவியாக வந்த அரச அதிகாரிகளான பிரதேச செயலாளர்(மூதூர்) கொண்ட குழுவினரை எதிர்த்து வன்முறையில் ஈடுபட முற்பட்டபோது அவர்கள் மீள்குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு இராணுவத்தை துணைக்கு கூப்பிட அவர்கள் மக்களின் ஆவேச நிலையை கண்டதும் மீண்டும் அவர்களை அகதிமுகாமுக்கு அழைத்துச்சென்றிருக்கின்றார்கள்.

தபோது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐநா மனிதஉரிமைக் கூட்டத்தொடரில் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டிருக்கக்கூடிய கோரிக்கைகளில்(petition) உள்ளடக்கப்பட்டதா அல்லது புறந்தள்ளப்பட்டுவிட்டதா என்று பாதிக்கப்பட்ட மக்கள் விசனப்படுகின்றார்கள். பிரதேச அரசியல்வாதிகளும் மாவட்ட அரசியல் வாதிகளும் இந்தவிடயத்தை எந்தளவு கவனித்துக்கொண்டுள்ளார்கள்?

தசக்கிரீவன்

EastSriLanka