தமிழீழத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களும் அது சார்ந்த தமிழர் மீதான வன்முறைகள் பற்றியும் முன்னைய கட்டுரையில் நுனிப்புல்மேய்ந்தோம். இப்போதைய கட்டுரையில் எமது தாயக மண்ணில் எமது சொந்தங்களுக்கு ஏற்பட்ட பேரழிவு பற்றி கையில் கிடைத்த சில ஆதாரங்களை வெளியிட உள்ளோம்

நெருப்புத்தணல்களை மடியில் கட்டிக் கொண்டு உணர்வுள்ள தமிழரால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்? வெறுமனே துக்கித்திருந்தால் மட்டும் காரியம் நிறைவேறி விடுமா? இதற்குத்தான் தீர்வு என்ன? இதைப்பற்றி யார் யாரெல்லாம் சிந்திக்க வேண்டும்

 இதற்கு முன்னர் தமிழர் அழிவுகளின் பகிர்வுகளை அனைவருடனும் பரிமாறிக் கொள்வோம்! பன்னெடுங் காலமாக சிங்களத்தால் தமிழர்களுக்கு ஏற்பட்ட மேலாதிக்க இன்னல்கள் காரணமாக தனி ராஜ்ஜியம்தேவை என உணர்ந்து பல தமிழர் அமைப்புகள் பல வழிகளிலும் போராடினார்கள். அத்தனையும் குறிப்பிட்ட எல்லையை மீறி தடை தாண்டிச் செல்ல முடியவில்லை. ஆனால் தமிழரின் உரிமைத்துவம் கொண்ட தாயக பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்திய பெருமை, ஆளுமை கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளையே சாரும். இந்த அளவிற்கான உயர்சிக்கு காரணம், விலைபோகா தலைமையும், எதிர்விமர்சனம் பற்றி அலட்டிக் கொள்ளாமையும், குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியும் ஆகும்

தற்போது தலைமை தாங்க முன்வரும் நாடுகடந்த தமிழீழ அமைப்புகள் இவற்றை கருத்திற் பதித்து முன்னோக்கி நகர்தல் வேண்டும். விமர்சனங்களுக்கும், கருத்து முரண்பாடுகளுக்கும், உட்சண்டைகளுக்குள்ளும் தம்மைப் புதைத்துக் கொண்டு திண்டாடுவதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டுவந்து நிறுத்திய இடமாகிய சர்வதேச மட்டத்திலிருந்து தமிழீழம்வரை கொண்டு நகர்த்தவேண்டிய நிலை தலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரித்தானதாகும். எனவே இவை இரண்டும் இணைந்து இயங்கவேண்டிய தேவை கட்டாயமானது. இது பற்றி சிந்தியாது நாடுகடந்த தமிழீழம் பற்றிய விமர்சனங்களுக்குள் புதையுண்டு கோழிச்சண்டைபிடிப்பதை நிறுத்தியாக வேண்டும். விமர்சனங்கள் எது வந்தாலும், எந்த ஆப்பு அடிபட்டாலும் அவற்றிற்கு முக்கியத்துவம் வழங்காது தமிழீழ அடைவுஎன்பதிலே கருத்தாக இருக்கவேண்டும். இதுவே தலைமை கற்றுத்தந்த பாடமுமாகும்

இனி எமது இதயங்களை இரணமாக்கும் எம்மவரின் சில பதிவுகளை மீட்டிப் பார்ப்பது இந்த சிவப்பு மேயில் பொருத்தமாகும்

பார்ப்பதோடு மட்டும் போதுமா? வடுக்கள் ஆறுவதற்கு தான் வழியென்ன? இதற்கு ஒப்பான ஒளடதங்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு ஒத்தடம் செய்வதற்கு புலம்பெயர் நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான என்ன வேலைத்திட்டங்களை இதுவரை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை சிவப்பு மேதினத்தில் பொதுமக்களின் பார்வைக்கு தாமதிக்காது சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இதுவே விதையாகிப் போன எம்முறவுகளின் ஆத்மசாந்திக்காக சமர்ப்பிக்கப்படும் பாத காணிக்கையாகும்

-தசக்கிரீவன்-

ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமைகளை பார்வையிட கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும். பார்த்ததும் அனைத்துலக சமூகத்திற்கும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ நாடுகளுக்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்திற்கும் தெரியப்படுத்தவும்.

Crimes+12.05.10