paraleised_Home logoமுள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட பெண் பரலைஸ் பயனாளிகளுக்காக முழுநேர பராமரிப்பு இல்லம் (பரலைஸ் கோம்) கிளிநொச்சி இரத்தினபுரத்தில் செக்டா எனும் தொண்டு நிறுவனத்தினால் சமூக சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இங்கு இலவசமாக பயனாளிகள் பராமரிப்பு வசதிகளை பெறலாம்.
போரினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் முள்ளந்தண்டு பாதிக்கபட்டவர்களுக்கும் கை, கால் பாதிக்கப்பட்டு அங்கவீனமான 14 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட பெண்களை முழுநேரமாகப் பராமரிப்பதற்கு பரலைஸ் மெடிசின் கோம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இப் பராமரிப்பு இல்லத்தில் பராமரிப்பு மற்றும் கல்வி, தொழிற்கல்வி பயிற்சிகளும் பயனாளிகளுக்கு சிறு வருமானத் திட்டங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி வகுப்புக்களும் வருமானச் செயற்பாடுகளும் இடம்பெறும். மாற்றுத்திறனுடைய பெண்களும் பகல் நேர பயிற்சி வகுப்புக்களிலும் பகுதி நேரமாகவும், முழுநேரமாகவும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
பரலைஸ் மெடிசின் கோமில் பயனாளிகளாக இணைய விரும்புவோர் 1ஆம் ஒழுங்கை, இரத்தினபுரம், கிளிநொச்சி. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். 0774118808 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
இயக்குனர். ச.சசிகரன்