boat-people-x-420x0இன்று இந்தோனேசியாவிலிருந்து 74 பேர் கொண்ட அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணித்தது. நடுக்கடலில் இயந்திரக்கோளாறு காரணமாக தத்தளித்துக்கொண்டு இருந்தது.

அகதிகள் படகிலிருந்த ஈழத்தமிழ் அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஈழத்தமிழர்களை தொடர்பு கொண்டு நடுக்கடலில் நடந்த பிரச்சனையை விபரமாக விளக்கிக் கூறியதன் விளைவாக அவுஸ்திரேலிய கரையோரக்காவல் படையினரால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தமிழர்கள் அவுஸ்திரேலிய காவல்துறையினருடன் தொடர்புகொண்டு சம்பவத்தை விபரித்ததன் விளைவாக காவல் துறையினர் வேகமாக செயற்பட்டு உயிர்ச்சேதம் எதுவும் இல்லாமல் படகில் பயணித்த அகதிகள் 74 போரையும் காப்பாற்றியிருக்கின்றனர்.

இந்த படகில் பயணித்த அகதிகளுக்கு நேரவிருந்த பெரும் ஆபத்தை தடுத்து காப்பாற்ற உதவிய அனைவரது மன உறுதியையும்,உதவும் மனப்பான்மையையும் பார்க்கும் போது உலகில் இன்னமும் தர்மம் சாகவில்லை,மனிதநேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதை கண்கூடாக பார்க்க முடிகின்றது.