nilamபொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று கூறலாம். நிலத்தினை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.

வரலாறுகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றதோ அது அதே இடத்தில் நின்று விடுவதில்லை கால ஓட்டத்திற்கு ஏற்ப புதிய வரலாறுகள் தோன்றுக் கொண்டுதான் இருக்கும் இது உலக நியதி இதனை யாராலும் மாற்ற முடியாது.

ஒவ்வொரு நிலப் பிரிவுகளுகளும் ஒவ்வெரு இனக்குளுக்கு உரியது. இது சங்க காலம் முதலே பின்பற்ற படுகின்ற ஒரு வழமை. நிலத்திற்காகவே எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்து, அவை வெற்றிபெற்றும் உள்ளன.

ஒரு இனம் தான் பூர்வீகமாக வாழ்ந்த பகுதி தனக்கான சொந்தம் என்று கருதுகிறது. அதனை எவரும் மறுக்க முடியாது. காரணங்கள் நிறையவே பொதிந்திருக்கின்றன. ஆனால் சிறிலங்காவில் இந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மை இனம் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்திற்கு என்று இருக்கும் தனித்துவமான பண்புகளை அழிக்கும் நடவடிக்கையே முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனைத் தான் ஆட்சியிலுள்ள அரசு செய்து வருகின்றது.

வடக்குக் கிழக்கிலுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுடைய நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தன் வசம் விழுங்கி வைத்துள்ளது அரசு.

இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள நிலங்கள் தமிழ் மக்களிடைய பூர்விக்க சொத்துக்கள். அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்து இறந்த இடங்கள். இந்த உணர்வின் வெளிப்பாடாக “சொர்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா” என்ற பாடலடி எல்லோருக்கும் ஞாபகம் வரும்.

உலக வரலாற்றில் பல பாகங்களில் குறிக்கப்பட்ட நிலத்தின் பூர்வக் குடிகள், வலிமை வாய்ந்த இன்னுமொரு இனத்தின் ஆக்கிரமிக்கப்பால் அழிக்கப்படுவதும் விரட்டடியடிக்கப் படுவதும், அடிமைப் படுத்தப்படுவதும் காலகாலமாக நடந்தேறி வருகின்றன.

இதனைத் தான் சிறிலங்கா அரசும் செய்து வருகின்றது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய நிலங்கள் எந்த விதமான காரணங்களும் இல்லாமல் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டுகின்றன. இவை அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற போர்வையிலும்  உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்கள குடியோற்றங்கள் என்ற போர்வையிலும் அபகரிக்கப்படுகின்றன.

திட்டமிட்ட இன அழிப்பு

தமிழினம் என்ற ஒன்று இலங்கைத் தீவில் இருக்கக்கூடாது என்ற முனைப்புடனேயே இலங்கை அரசு திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரங்கேற்றி வருகின்றது.

ஒரு நாட்டில் வாழும் மக்களோ அல்லது தனி நபரே அந்நாட்டுக்குள் எந்த இடத்திலும் குடியமர்வதற்கு உரிமை உடையவர். ஆனால் இன்னொடுவருடைய நிலத்தை பறித்து அதில் வாழ்வதற்கு மற்றவருக்கு உரிமை இல்லை.

குறிப்பாக தமிழர் தாயகப் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான சிங்களக் குடியேற்றங்கள் இன்று முல்லைத்தீவு வரை படர்ந்து சென்றுள்ளன.

அநுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலகமொன்றை இலங்கை அரசு திட்டமிட்டு நிறுவியுள்ளது. தனித் தமிழ் மாவட்டங்களை சிங்கள கலப்பு மாவட்டங்களாக மாற்றும் அரசின் வியூகங்களுள் இதுவும் ஒன்றுதான்.

யாழ். மாவட்டத்தில் வலி. வடக்குப் பகுதியைச் சேர்ந்த 24 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசத்தை மக்களிடம் கையளிக்காமல், சிங்கள இராணுவம் முற்றுமுழுதாகப் பறித்தெடுக்க அரசு முடிவெடுத்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானத்தளம் என்பவற்றையும், படைத்தளக் கட்டுமானங்களையும் விரிவாக்கம் செய்யும் நோக்கிலேயே இந்தப் பிரதேசம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இந்தக் காணிகளைச் சுவீகரிப்பதற்காக யாழ். செயலகத்தில் அலுவலகம் ஒன்றும் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது மீதமிருக்கும் காணியை கொள்ளையிடவா அல்லது தமிழ் மக்களின் காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேலையா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குறித்த 24 கிராமசேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நலன்புரி நிலையங்களிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

போர் முடிவுற்ற பின்னர் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற்றுமாறு இந்தப் பகுதி மக்கள் அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தனர்.

மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் மீறி தொடர்ந்தும் படைத்தரப்பின் கட்டுப்பாட்டிலேயே அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு வேலியிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தையும் முழுமையாக சிங்கள மயமாக்கும் தீட்டம் மோற்கொள்ள படுகின்றன.

ஏன் இவ்வாறு தமிழர் தாயக பகுதிகளில் சிங்கள குடியோற்றங்கள் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் திட்டமிட்ட ரீதியில் நடைபெறுகிறது என்பது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகக் காணப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீ்ழ்ச்சிக்குப்பின்னர் வட பகுதியில் அதிகளவான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். எனவே இதனை குறைக்க வேண்டும் என சர்வதேச நாடுகளும் மனிதாபிமான அமைப்புக்களும் கோரி வருகின்ற நிலையில்,இராணுவத்திரை குறைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கின்றது. ஆனால் இராணுவத்தினரை குறைத்தால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகி விடுவார்கள் என்ற அரசு பயம் கொள்கிறது.

இதற்காக தமிழர் தாயக பகுதியில் சிங்கள குடும்பங்களை குடியோற்றி, அங்கு சிங்கள மக்கள் தான் வாழ்கின்றார்கள் இராணுவத்தினர் இல்லை என்று காட்டிக் கொள்ள இலங்கை அரசு முயற்சிக்கின்றது.

சிங்கள,முஸ்லீம் மக்களைத் தமிழர் பகுதியில் திட்டமிட்ட ரீதியில் குடியோற்றுவதால் இனவிகிதாசாரத்திலும் பாரிய மாற்றத்தினை ஏற்ப்படுத்த முடியும். இதன் மூலம் வடக்கில் தேர்தல் ஒன்று இடம்பெறுமாக இருந்தால் தமிழர்கள் பெரும்பான்மை பலத்தை இல்லாது செய்ய முடியும் என அரசு கருதுகிறது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வடக்கு தேர்தல் ஒன்றை நடத்தப் போவதாக அரசு அறிவித்துள்ளது அதற்கு முன்னர் இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றது அதற்கான அடித்தளங்களை தற்போது அரசாங்கம் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது.

ஒரு பிரதேசத்தின் இனப்பரம்பல் அப்பிரதேசத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. எனவே அதனை மாற்றினால் எல்லா விடயங்களையும் மாற்றிவிடலாம்.இதனை கருத்திற் கொண்டுதான் சிறிலங்கா அரசு செயற்பாடுகிறது..

இதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை எப்படியாவது தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க வேண்டும் என்ற அவாவில் அரசு இருக்கின்றது. இதற்கு தகுந்த உதாரணமாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கூறலாம்.

யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்கு இன்னும் ஒருமாதமே இருக்கின்ற நிலையில் வடக்கில் காப்பெற் வீதிகளை தவிர எந்தவிதமான அபிவிருத்தி பணிகளையும் காண முடியவிவில்லை.

அத்துடன் வடபகுதியில் ஊடக சுந்தந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. இந்தநிலையில் எப்படி நீதியான ஒரு தேர்தலை எதிர்பாக்க முடியும் என்பதே தமிழ் மக்களின் இன்றைய கேள்வியாகும்?மூலம் :உதயன்