Sujan_Nat_124 ம் திகதி மாசி மாதம் 2013 ம் ஆண்டு சுவிஸ் நாடு தழுவிய நீளம் பாய்தல் போட்டியில்(Biel மாநகரத்தில்) தமிழீழ செல்வனாகிய நற்குணசிங்கம் சுயன் அவர்கள் 7 மீற்றர் தாண்டி முதலாமிடம் பெற்றதை பாராட்டி ‘தணல்’ இணையம் வழங்கிய

 

 பாராட்டுப் பா

வாழையடி வாழையாய் நாம்

வாழ்ந்திருந்த எம் தேசத்தில்

வாழ்ந்திருக்க முடியாமல்

புலம் அகன்று சேர்ந்திங்கு

வாழ்ந்திருந்த வேளைதனில்

மீண்டும் ஓர் ஈழத்தமிழ் முத்திரை பதிப்பு

அது – தமிழீழ மண்ணின் பிரதிபலிப்பு

அன்புடன் சுயனே!

சுயமாக நீ கொண்ட வெற்றி

தாயகம் கண்ட நயமான வெற்றி

அகிலமே வெற்றி முரசு ஒலிக்க

ஒலிம்பிக் பந்தயமதில்

உன் சுயம் வெளிப்படும்

அந் நன் நாள் தூரத்தில் இல்லையென

நெஞ்சார வாழ்த்தும்

‘தணல்’ குழுமம்