எப்படித்தான் வெள்ளாவி வைத்து வெளுத்தாலும் இந்த வேட்டி வெளுக்காதுஎன்னும் கிராமத்திய பழமொழி நினைவில் சுழல்வதை நிறுத்த முடியவில்லை. அதாவது, இலங்கை அரசுக்கு எப்படியான அளுத்தங்களைக் கொடுத்தாலும் அதன் பிறவிக்குணம்மாறாது

மகாவம்சம்நூல் யாக்கப்பட்டதே தமிழ் மக்களை சிங்களமக்களுக்கு எதிரியாக காலம் தோறும் நிலையாக வாழவேண்டும் என்பதற்காகவே என்பதை அதை முழுமையாக படிக்கும்போது புரிந்து விடும். அதனால் பிறவிக்குணம்மாறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை. ஆனால் அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. மாற்றியாக வேண்டிய பொறுப்பும் தமிழ் மக்களிடையே உள்ளதையும் மறுக்கமுடியாது

கடந்த வருடம் மேமாதத்துடன் ஓய்வுக்கு வந்த ஈழப்போர்கற்றுத்தந்த பாடம் என்னவென்பதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும். ஏறத்தாள ஒருவருடம் கடந்த நிலையில் ஈழத்தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதில் மாத்திரம் எந்த அளவு நடவடிக்கைகள் சிங்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்பதை புத்திஜீவிகள் ஆவணப்படுத்த வேண்டிய கட்டாய பணி உள்ளதென்பதை இச்சந்தர்ப்பத்தில் உணர்தல் வேண்டும். ஜனனாயகப் போராட்டத்தை முன்னெடுக்க முயலும் தலத்திலும், புலத்திலும் உள்ள அறப்போர் குழுக்களுக்கு இவை மிகவும் உறுதுணையாக அமையலாம். இன்றைய காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய முதன்மையான பணியும் கூட இதுவாகும்

அறிவுக்கும் நினைவுக்கும் எட்டிய வரையில்,

கடந்த மே மாதத்தோடு பின்னடைவு பெற்ற விடுதலைப் புலிகளின் போரானதைத் தொடர்ந்து சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான நிகழ்வுகள் பதிவில் இருக்க வேண்டியதாகிறது. போர் முடிவடைந்ததுடன் உடனடியாக இடம்பெற்ற நிகழ்வானது திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்திருந்த(மூதூர்) கங்குவேலிஅகத்தியர் தாபனம்(திருக்கரைசையம்பதி) முற்றாக சிங்களப்படையினரால் அழிக்கப்பட்டது. அகத்திய மாமுனி மகாவலி கங்கையிலே திருமுழுக்காடி முத்தியடைந்த புனித இடமாகும். இவ் அகத்திய தாபனமானது பன்னெடும் காலமாக தமிழ்மக்களால் ஆடி அமாவாசைக் காலங்களில் தீர்த்தமாடுவது இன்றுவரை வழக்கத்தில் உள்ளது. இதன் அருகாமையில் தென்கிழக்காக அமைந்திருக்கும் நீலன்பளைஎன்ற தமிழ் பகுதி 1954 ம் ஆண்டுக்கு பின்னர் நீலப்பொலஎனப் பெயர் மாற்றம் பெற்று சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. இக்கிராமத்தின் சிங்களத் தனித்துவத் தன்மையைபேணவேண்டியதுடன் வரலாற்றுக்கப்பாற்பட்ட காலம் முதல் சிங்கள மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்ற பொய் வரலாற்றை புனைவதற்கு தமிழர்களால் பூஜிக்கப்படும் அகத்திய தாபனம்தடையாக இருக்கும் என்ற சிங்களத்தின் நெடுங்கால நினைப்பே இந்த தமிழரின் வரலாற்று வாழ்விடத்தை அழித்தமையாகும்.

இது பற்றிய செய்தி

http://www.nerudal.com/nerudal.12559.html

http://www.seithy.com/breifNews.php?newsID=21037&category=TamilNews

நன்றி ‘நெருடல்’, செய்தி.கொம்

 * யாழ்ப்பாணத்தின் கேந்திர துறைமுக இடமாகிய மாதகல் பகுதியில் பௌத்த மதத்தை பரப்புவதன் பொருட்டு இந்தியாவிலிருந்து மகிந்தனும், சங்கமித்தையும் வந்திறங்கியதாக ஒரு பொய் வரலாற்றுப் புனைவை ஏற்படுத்தி அங்கு ஒரு பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதையும் அதற்கான அடிக்கல்லை இலங்கை ஜனாதிபதியின் மனைவி இட்டதையும் சிந்தித்து பார்கவேண்டியதாக உள்ளது.

இது பற்றிய செய்தி

http://tamilpoonga.com/news/tamilnews/tamilnews.pl?record=438

http://arumpu.com/News/read_more.php?NewsID=416

நன்றி தமிழ் பூங்கா, அரும்பு

 * வடபகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் படையினர் பாசறைகளையும் அமைத்து வருவதோடு பல கிராமங்களின் தமிழ்ப் பெயர்களை சிங்களப் பெயர்களாக (+ம்: உருத்திரபுரம் உருத்திரபுர, உதயநகர் உதய மாவத்தை) மாற்றி வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இது பற்றிய செய்தி

http://www.tamilwin.com/view.php?2a26QVF4b43998ie4b46IP5ce2bf1GU2cd3OipD3e0dBZLuGce03g2FP0cd3tjoCd0

http://www.tamilwin.com/view.php?2aSIPTe0d1joA0ecGG1V4b4j98scd3g2F3dc2Dpi3b436QV3e22ZLu30

நன்றி தமிழ் வின்

 * யாழ்நகர் மத்தியில் பௌத்த விகாரை அமைக்க முற்பட்டு வருவதையும், இந்துக்களின் புனித தலமான கீரிமலை எல்லையினுள் பௌத்த அடையாளங்களை ஸ்தாபிக்க முனைவதும், 3 நட்சத்திர உல்லாச விடுதிகள் அமைக்க முற்படுவதும் சிங்கள மயமாக்கலுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஆகும்

இது பற்றிய செய்தி

http://www.puthinappalakai.com/view.php?20100214100497

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=877:2009-12-24-08-48-56&catid=45:news

நன்றி புதினப்பலகை, ‘உயர்வு

 * இலங்கையின் முதல் துறைமுகமும், தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடமுமான (திருக்கோணமலை மாவட்டம்) இலங்கைத் துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தை முற்றாக பௌத்த ஆலயமாக்குவதற்கான அமைப்புப் பணிகள் நிறைவேறி வருவதையும், அதே பகுதியில் உள்ள புன்னையடிமலைநீலியம்மன் இந்து ஆலயத்தை அகற்றிவிட்டு பௌத்த விகாரை அமைத்திருப்பதும் சிங்கள மேலாண்மையின் மிகப்பெரிய வெளிப்பாடாகும்

இது பற்றிய செய்தி

http://www.thanall.com/?p=83#more-83 

* முட்கம்பி முகாமுக்குள் வாழும் எம் இரத்தத்தின் இரத்த உறவுகளுக்கு நடந்த அனர்த்தங்களிற்கு மகுடம் வைத்தாற்போல் நெஞ்சைப் பிளக்கும் மிகப்பெரிய அனர்த்தமாக இதைக்குறிப்பிடலாம். இச்சம்பவத்தை விலாவாரியாக எழுதி எமது கண்ணையே நாம் குத்திக்கொள்ள கூடாதென்பதற்காக, விளங்கிக் கொள்ளுவதற்கு வசதியாக மிகச்சுருக்கமாக தங்களின் பார்வைக்கு சமர்ப்பிப்பது மிகப்பொருத்தமாகும்

முட்கம்பி வேலிக்குள் முடங்கிக் கிடந்த எம் தமிழ் யுவதிகளின் கைகளில் சிங்கள இராணுவத் தகப்பன்களின் குழந்தைகள்!

இதற்கான பரிகாரம் பற்றி நாம் சிந்திப்பது எப்போது?

 

இது பற்றிய செய்தி

http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=10&t=8617

நன்றி எதிரிஇணையதளம்

இவற்றுக்கு மேலும் மெருகூட்டி மேலும் சிங்கள மேலாதிக்கத்தை நிலைப்படுத்த வடகிழக்கில் வாழும் தமிழ் இளைஞர் யுவதிகள் உட்பட மாணவர்களையும் கடத்திக் கொலைசெய்து, பீதி உணர்வை தமிழ்மக்கள் மத்தியில் எப்போதும் தக்க வைத்து சிங்களம் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சிகள் இவை என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது

இன்றைய நிலையில் வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டு கிடப்பதையும் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் அடிப்படைத் தேவைகள் இன்றி அடிமைத் தனமாக நடத்தப்படுவதையும் கண்கூடாகத் தெரிகிறது. எந்தெந்த வழிகளில் தமிழ்மக்களை சாறுபிழியமுடியுமோ அந்த அளவிற்கு அரசு நடைமுறைப்படுத்தி அடிமைப் படுத்துகிறது. எரிந்துகொண்டிருக்கும் இது போன்ற தமிழின அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வையாது இலங்கை அரசு ஒருங்கிணைந்து வாழ்வதற்கான ஆணைக்குழுக்களை அமைப்பதில் கடுகளவு பயனையும் காணமுடியாது

இவற்றின் மத்தியிலே,

கடந்த அனர்த்தத்திலே உயிரிழந்தவர்களையும் பாதிப்படைந்த சிறுவர்களையும் அதுவும் தமிழர்களின் சுதந்திர விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய போராளிகளின் குடும்பங்களையும், ஏன் இந்த வன்னி மக்களையும் இப்போது எந்தளவு தூரம் புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் நினைத்துப் பார்க்கிறோம் என்பதை எமக்கு நாமே எடைபோடுவோம். அனைத்து ஈழமக்களின் விடிவிற்காக வன்னிமக்களும் அவர்கள் போன்று பாதிக்கப்படும் ஏனைய தமிழ்மக்களும் மாத்திரம் இந்த வேதனைகளை அனுபவிக்க வேண்டும் என்ற தலையெழுத்து ஏன் அவர்களுக்கு

அவர்களின் நல்வாழ்வுக்கான எதிர்காலம் சார்பான என்ன கட்டமைப்பை புலம்பெயர்வாழ் மக்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்? இதுபோன்ற பல கேள்விகள் எம்முன் விடையின்றி விரிகிறது. இவற்றிக்கான விடைகளை காண்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டிய கட்டாய கடமையின் நிமித்தம் பேதங்களை மறந்து அனைத்து தமிழ்மக்களும் ஒன்றுபடல் வேண்டும்

இவை யாவற்றையும் ஒரு புறம் வைத்துவிட்டு உற்று நோக்கினால், புலம்பெயர் நாடுகளிலே நடந்தேறிய தேர்தல்கள் நிறைவடைந்த போதிலும், இப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்த மக்களுக்கு வெறும் ஏமாற்றமே. ‘உள்வீட்டினுள்ஏற்பட்ட முரண்பாடுகள் முற்றி இணையதளங்களை ஆக்கிரமித்து அசிங்கப்படுத்தி நிற்கிறது

இது பற்றிய செய்தி

http://www.tamilwin.com/view.php?2a26QVH4b4dj98q34b0SIPT3e22R1GGbcd3aipD4e0dLZLukce0cg2F32cde1joK30

நன்றி தமிழ் வின்

இந்த பதவிச் சண்டைக்காக புலம்பெயர் வாழ் தமிழீழமக்கள் வாக்குப் பண்ணவில்லை என்பதை தேர்தல் காரர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இத்தேர்தல்கள் மூலம் இலங்கை அரசை கடுப்பேற்றுவதைவிட பெரிய பயன்கள் எதுவும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை. ஈழம்வாழ் தமிழ்மக்களின் நலன்களுக்காக புலம்பெயர் மக்களை ஒருங்கிணைக்கும் மக்கள் அமைப்புக்கள், அம்மக்களின் விருப்பு வெறுப்புக்களையும் ஆலோசனைகளையும் அவர்கள் ஊடாகவோ அல்லது அவர்களின் அரசியல் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாகவோ அறிந்துகொள்ளல் வேண்டும்

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்என்பதற்கமைய மக்களும் இன்றி வாழ் நிலமுமின்றி நிர்கதியான பின்பு எப்படியான தீர்வை முன்வைக்கப் போகின்றோம். மக்களைக் காப்பாற்றுவது பிரதானமானது. மற்றையது, சொந்த வாழ் நிலங்களில் வறுமையின்றி சுதந்திரமாய் வாழ வைப்பது. இவை இரண்டையும் உடனடியாக அமுல்படுத்தக் கூடிய கட்டமைப்பை புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்களின் தலையாய கடமைகளாகும். இதுவே அனைத்து தமிழ்மக்களும் எதிர்நோக்கும் ஒளடதமாகும். இதையே மே‘ 18 இல் அனுஷ்டிக்கப்பட இருக்கும் அனர்த்த நினைவு நாளில் பிரகடனமாய் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் உறுதியிட்டு கூறிக்கொள்ளவேண்டும் என்பதே தமிழ்மக்களின் விருப்பங்களும் ஆகும்

ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளும், அதற்கு ஏதுவாக புலம்பெயர் வாழ் மக்களின் நலன் சார்ந்த கட்டமைப்புகளும் ஒரே நேர்கோட்டில் பயணித்தால் மட்டுமே எமது இலக்கை எட்ட முடியும். அதுவரை கேள்விக்குறிதான்

தசக்கிரீவன்

மாதகல் பௌத்த விகாரை

மாங்குளம் சிங்கள குடியேற்றம்

கங்குவேலி அகத்திய தாபனம்