அனைத்துப் பெற்றோர்களினதும் கவனத்திற்கு!

ஆரம்பப் பாடசாலை மாணாக்கர்களின் நவீன தொடர்பூடகங்கள், பாவனை தொடர்பான விழிப்புணர்வுத் தகவல் திரட்டு.

தற்காலத்தில் நவீன ஊடகங்களாக கணிக்கப்படுபவை தொலைக்காட்சி அடங்கலாக, கணணியும் அதனுள் இணையதளம், கைத்தொலைபேசி போன்றவை பாலகர்களை வெகுவாக ஈர்த்துவரும் தொடர்புச் சாதனங்களாகும். இது தொடர்பாக பெற்றோர்களின் பங்களிப்பு மிக அவசியப்படுகின்றது.

* மேற்குறிப்பிட்ட தொடர்பூடகங்கள் சம்பந்தமான குறைந்த அளவிலான அடிப்படை விடயங்களை பெற்றோர்கள் அறிந்திருத்தல் வேண்டும். அதனூடாகத்தான் பாலகர்களுக்கு உகந்தவையா என்பதை தீர்மானித்து அவர்களின் பாவனைக்கு உட்படுத்த முடியும்.

முக்கியமான சில குறுந் தகவல்கள்

* பாலகர்களின் தொடர்பூடகப் பாவனைகளுக்கு கண்காணிப்பாளர்களாகவும் வழிகாட்டியுமாகுங்கள்  * நவீன தொடர்புச் சாதனங்களில் பாலகர்களுக்கு ஈர்ப்பு ஏற்படப் பிரதான காரணம் சூழலே ஆகும். சூழல் வயப்பட்ட பிள்ளைகளுக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகரித்து சாதனங்களை பாவிக்க தாமாகவே முன்வருகிறார்கள். இது பெரும் சவாலாகும். இந்த இடத்தில் பெற்றோர்கள் தம் காலங்களை அர்ப்பணம் செய்து வழிகாட்டிகளாக இருத்தல் வேண்டும்.

* நவீன ஊடகங்களின் தகவல் பரிமாற்றங்கள் பற்றி கலந்துரையாடுங்கள்.  * பாலகர்கள் மேற்படி தொடர்பூடகங்களில் தங்களின் விருப்புக்கேற்றவாறு தெரிவு செய்யும் நிகழ்சிகளை பெற்றோர்கள் அவதானித்து அதிலுள்ள பயன்தரக் கூடிய, கெடுதல் விளைவிக்கக்கூடியவற்றை பகுப்பாய வேண்டும். மேலும் பிள்ளைகளின் தனிப்பட்ட கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் விருப்புகளிலுள்ள பொருத்தப்பாட்டை அறிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அவர்களின் ஆற்றலுக்கும், வளர்ச்சிக்கும் ஏற்றவாறு தெரிவு செய்வதற்கு பெற்றோர்கள் அனுசரணை வழங்கும் பட்சத்தில் பிள்ளைகளின் குறித்த துறை சார்ந்த கல்வியில் பயனுள்ள நிலையை சுய திறனுடன் உச்சத்தை அடைய முடியும்.

* ஊடகங்களின் கேடுதரும் தாக்கங்களிலிருந்து பாலகர்களை காத்துக்கொள்ளுங்கள். * பாலகர்கள் பயன்படுத்தும் தொடர்பூடகங்களை அவர்களின் வயதிற்கேற்ப கட்டுப்படுத்தல் வேண்டும்.

* பாவனை நேர மட்டுப்படுத்தல் மிக அவசியமானது.

* பாலகர்களின் பெற்றோர்கள் சூழலில் பழகும் நண்பர்களின் பெற்றோர்களுடன் அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்வதுடன், பரஸ்பரம் பாலகர்களின் நலன் சார்ந்து தொடர்புச் சாதனங்கள் சம்பந்தமாக கலந்துரையாட வேண்டும்.

* தேவைப்படும் பட்சத்தில் தொடர்புச் சாதனங்களின் தணிக்கை, தடுப்பு போன்றவற்றுக்கான மென்பொருள் பாவனை சார்ந்த விடயங்கள் பற்றி துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம்.

* நேர ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பாலகர்களுடன் இணைந்து கற்றுக்கொடுங்கள்.  * தொடர்பூடக பயன்பாடு பற்றி பாலகர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.

* எதிர்காலத்தில் வாழ்க்கை ஒழுங்குடன் இணைந்த தொடர்பூடக அறிவைப் பெறுவதில் பிள்ளைகளுடன் இணைந்து தீர்மானியுங்கள்.அதன் பயன்பாடுகளின் பிரதிபலிப்புகள் பற்றி நம்பிக்கையூட்டுங்கள். இந்த ஒழுங்கின் படி அதிகரிக்கும் பாலகர்களின் வயதின் வளர்ச்சியுடன் அறிவும் வளரும்.

‘தணல்’ குழுமம்