தாயக விடுதலைப் போராட்டத்திலே அந்நிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கெதிராக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து இந்திய ஏகாதிபத்தியத்தின் கபட முகத்திரையை கிழித்தெறிந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரன் லெப். கேணல் திலீபனுக்கு 25 ம் ஆண்டு நினைவு வீரவணக்கங்கள். எமது தாயக விடுதலைப் போராட்டத்திலே எப்போது  மக்கள் மயப்படுத்தப்பட்ட மக்கள் போராட்டமாக மாறுகின்றதோ அன்று தான் தமிழீழம் மலரும் என்று ஓயாது ஒவ்வொரு மேடைகளிலும் முழக்கமிடுவான். அந்த மாவீரனின் கனவை நிட்சயமாக நனவாக்குவோம் என்று இந்த வேளையிலே நாம் எல்லோரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

2ம் இணைப்பு

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு சுவிஸ் சுக் மாநிலத்தில் நடைபெற்றது. தியாக தீபம் திலீபனின் நினைவாக அந்நிகழ்வுக்கு வந்த மக்களின் பங்களிப்பால் தாயகத்திலே வன்னிப்பகுதியிலே போரினால் பாதிக்கப்பட்ட 15  குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

தகவல்

விழா ஏற்பாட்டாளர்

நீலன்