31.08.2012
வணக்கம்,

மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலுக்கான அழைப்பு: 

எதிர்வரும் மாவீரர் நாள் நிகழ்வினை பிரித்தானியாவில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து சென்ற வருடத்தைப் போல் இம்முறையும் பொதுக்குழு அமைத்து ஒரே நிகழ்வாக, தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தியாக எழுச்சியுடன் மாவீரர்களுக்கான புனித நாளை சிறப்பாக நடாத்துவதற்கான சகல பணிகளையும்  தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் மேற்கொண்டு வருகின்றது.

எமது எதிகால சந்ததியின் சுதந்திரமான வாழ்வுக்காக, தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக, தங்களை முழுமையாக அர்ப்பணித்து எமது தேசத்தின் விடுதலைக்கான வித்துக்களாக தமிழீழ மண்ணில் விதைக்கப்பட்டுள்ள மாவீரர்களை தலைசாய்த்து வணங்கி, அவர்களின் விதைகுழிகள் மீது சத்தியம் செய்து புனிதமான நாளினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே தாயக, தமிழக, புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களின் பெரு விருப்பாக‌ உள்ளது.
 
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தமிழ்மக்கள் கடந்த கால போராட்ட சம்பவங்கள் அனைத்தையும் மறந்து வாழ விரும்புவதாக சர்வதேச நாடுகளுக்கு அறிக்கையிடும் சிங்கள அரசுக்கும், சர்வதேச நாடுகளுக்கும், தமிழ்மக்கள் தமது இறுதி இலக்கை அடையும் வரை மனம் தளர்ந்து சோர்வடைந்து போகமாட்டர்கள் என்பதை வெளிப்படுத்தி, மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களையும் நெஞ்சில் சுமந்து அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ தேசத்தின் புதல்வர்களை வணங்கி அவர்கள் மீது உறுதி எடுத்துக்கொள்வோம்.
 
இதற்கமைவாக, அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்துடன் எதிர் வரும் 10.09.2012 திங்கட்கிழமைக்கு முன்னதாக தொடர்புகொண்டு தமது அமைப்புச் சார்ந்த ( அரசியல் அமைப்புக்கள், பாடசாலைகள், ஆலயங்கள், ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள்) பிரதிநிதிகளை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் இவ்வாண்டு மாவீரர் நாளினை நடாத்துவதற்காக அமைக்கப்படும் பொதுக் குழுவில் இணைந்து, ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குவதோடு மாவீரர்நாள் நிகழ்வுக்கான செயற்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
 

தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் தொடர்பான மேலதிக விபரங்கள், பின்னர் அறியத்தரப்படும்.


அலுவலக முகவரி: 

106, TNRF

No: 10, Osram House,

East Lane Business Park,

Wembley,

Middlesex,

HA9 7NG

 
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்
ஐக்கிய இராச்சியம்
Tel: 074 0429 4894