இலங்கையிலே மாற்றம் காணாத, தமிழருக்கு எதிரான வன்முறைகளின் தொடர்ச்சி பற்றி சர்வதேசம் உணர்ந்து வருகையில், இந்த யூலை மாத படுகொலையானது கலங்கரை விளக்காக மிளிர்வதை இக்கணத்தில் சர்வதேச மட்டத்தில் வாழும் வன்முறைக்கெதிரான அமைப்புகளுக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.

சிறைச்சாலை என்பது குற்றங்களுக்கான தண்டனைபெறும் இடமாகவும் அத்தோடு மீண்டும் குற்றங்களைச் செய்யாது உணர வைக்கும் ஒரு போதனாசாலை எனலாம். இலங்கையிலே தமிழரைப் பொறுத்தவரையில், சிறைச்சாலை என்பது படுகொலைச்சாலை ஆகும்.

2012 ம் ஆண்டு  ஆடி மாதம் சிறைச்சாலைப் படுகொலை இரண்டைக் கண்டுவிட்டது. இவ்விரண்டு கொலைகளும் தமிழீழ மக்களின் விடுதலையின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென தேசியத்தை நேசிக்கின்ற அனைத்துலக வாழ் தமிழ்மக்கள் உள்ளுணர்வுடன் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதன் வெளிப்பாடாக மரணித்த இவ்விரு தமிழீழ நேசர்களையும் ‘நாட்டுப்பற்றாளர்கள்’ என மகுடம் சூட்டி கெளரவிக்க கோருகிறோம்.

தணல் குழுமம்