இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ போராட்ட வரலாற்றில் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் கரும்புலிகள் நாளும் ஒன்றாகும். காரணம், தமது உயிரையே ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதுடன் விடுதலைப் போராட்டத்தின் விரைவான முன்நகர்விற்கு மிகவும் உறுதுணையாகவும் மிக முக்கிய காரணமாகவும் அமைந்தவர்கள் கரும்புலிகள்.

யூலை 5 ம் திகதியான இன்று கரும்புலிகள் நாள் தாயகத்தில் வன்னியிலும் சுவிசில் சுக் மாநிலத்திலும் உணர்வுடனும், எழுச்சியுடனும் அனுட்டிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வுகளில், தாயக மீட்புப் போரில் மண்ணில் வித்தாகவும், கடலில் காற்றாகவும், விண்ணில் ஒளியாகவும் கலந்துவிட்ட அந்த உன்னத மாவீரர்களின் உறவினர்களும், சக போராளிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு தீபமேற்றி கொண்டாடுகின்றனர்.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் – எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.   தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்………!