தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு படையணியாக, சண்டையின் போக்கிலே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு அணியாக இருந்த கரும்புலி படையணியின் நினைவுநாளான கரும்புலிநாள் அனுஸ்டிக்கப்பட இருக்கின்றது.

கரும்புலிகளாக சென்று தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்கள் அவர்களின் அந்த தியாகத்தை தமது சுய இலாபங்களுக்காக செய்யவில்லை. அவர்கள் தமது பெறுமதிமிக்க உயிர்களை ஒவ்வொரு தடவை தற்கொடையாக தரும்பொழுதும், ‘என்னுடைய இந்த சாவோடு இந்த போர் வென்றுவிடும், போரை வெல்வதனால் எமது தாய் மண் மீட்கப்பட்டுவிடும்’ என்ற கனவோடு தான் வீர காவியமானார்கள்.

நாங்கள் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அனைவரும் அவர்கள் செய்த அந்த புனிதமான தியாகங்களின் மேல் நின்றுதான் இன்று இந்த சுக போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி இந்த புனிதர்களையும், அவர்கள் செய்த  ஈடு இணையற்ற அந்த தியாகங்களையும் மனதில் நிறுத்தி இந்த புனித நாளை அனுஷ்டிக்கவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

‘புலிகளின் தாகம்

தமிழீழ தாயகம்’

நீலன் அணி – ஏற்பாட்டாளர்கள்