3.11.1932 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் என்ற கிராமத்தில்  பிறந்த திருமதி பூபதி  கணபதிப்பிள்ளை அவர்கள் 19.03.1988 அன்று இந்திய இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருந்த போரை நிறுத்தும்படியும், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இனப்பிரச்சினைக்கான தீர்வை காண வேண்டியும் 2 கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இறுதியில் அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாது, தியாக தீபம் திலீபனைப் போலவே, 19.04.1988 அன்று தனது இன்னுயிரை தமிழர்களின் அபிலாசைகளுக்காகவும், தேசியத்திற்காகவும் ஈந்தார்.

அன்னாரது நினைவு வணக்க நாளை சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழீழ மக்கள் 19.04.2012 அன்று அனுஷ்டிக்க ஏற்பாடு செய்துள்ளனர். தமிழீழ தேசியத்தையும், அன்னை பூபதி போன்ற நாட்டுப்பற்றாளர்களின் தியாகத்தையும் நேசிக்கின்ற, மதிக்கின்ற தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.

 

‘தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்’

சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள்