இலங்கைத் தீவில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள், ஓர் வெளிப்படையான செய்தியை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு கூறி வருகின்றனர். அதாவது இத் தீவு சிங்கள மக்களுக்கும் பௌத்த சமயத்திற்கும் hpயது, தமிழ் மக்களாகிய நீங்கள் எம்Kடன் சேர்ந்து வாழ விரும்பினால் நீங்கள் ஓர் சிறுபான்மை இன அந்தஸ்துடன் சிங்களவர்களாகிய எம்மை அரவணைத்து வாழுங்கள். இல்லையேல் எம் இனத்தினால் உங்களுக்கு ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களை அனுபவிக்கத் தயாராயிருங்கள் என்பN அதுவாகும்.
இலங்கைத் தீவு 1948 ஆம் ஆண்டு சுதந்திர மடைந்தது முதல் இன்றுவரை இந்தச் சிங்கள அரசுகளின் போக்கினால் இத்தீவில் வடக்கு, கிழக்கு முதல் மலைநாடு வரை தமிழர்கள் படும் கஷ்ட நஷ்டங்கள் தொல்லைகள் வர்ணிக்க முடியாதவை!

இன்று 

 
 
 

உள்நாட்டில் ஆயுதப்போராட்டம் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மௌனித்துள்ளது. போராடியவர்களில் ஏறக்குறைய 40,000 போராளிகள் மாவீரர்களாகவும் இதற்கு மேலாக ஏறக்குறைய 2 இலட்சம் பொது மக்கள் உயிhpழந்துள்ளனர்.

ஆனால், உள்நாட்டிலோ, புலம்பெயர் வாழ்விலோ தமிழ்மக்கள் யாராயினும் தமது அரசியல் அபிலாஷைகளுக்காக Kன்வைத்த கால்களை இன்றும் பின்வைக்கவில்லை. இது சிங்கள ஆட்சியாளருக்கு கிடைத்த ஓர் மாபெரும் ஏமாற்றமெனலாம்.

உள்நாட்டில் தேர்தல் காலங்களில் தமிழர் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிகள் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் மன உறுதியை சர்வதேச Kதாயத்திற்கு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

இதேவேளை, புலம்பெயர் வாழ்வில் ஒரே குடைக்கு கீழ் நின்று தமது பங்களிப்புகளை செய்த தமிழ் மக்கள் வேறுபட்டு, பிளவுபட்டு நின்ற போதிலும் இவர்கள் யாரும் தமது அபிலாஷைகள், நோக்கங்களிலிருந்து திசை திரும்பியவர்களாகக் காணப்படாதது சிங்கள ஆட்சியாளhpன்பிhpத்து ஆளும்வேலைத் திட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் சர்வதேச சட்டங்களுக்கு இணங்க ஓர் சட்டரீதியான போராட்டமாக காணப்பட்ட போதிலும் ஓர் சில காரணங்களுக்காக இதை மிக இலகுவாக பயங்கரவாதப் பட்டம் சூட்டி பல நாடுகளின் உதவியுடன் அழித்தும் விட்டனர்.

உள்நாட்டு தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து பெற்றுவரும் தமிழர் கூட்டமைப்பை அழிப்பதற்கும் பிளவு படச்செய்வதற்கும் பல சூழ்ச்சிகளை அரசு மேற்கொள்வது போல் இன்று புலம்பெயர் வாழ் சங்கங்கள் பிரKகர்களிடையே தமதுபிhpத்து ஆளும்திட்டத்தை அரசு ஆரம்பித்து விட்டது. 

 

இதற்கு அரசு யாரை புலம்பெயர் வாழ்வில் பயன்படுத்துகிறார்களென்பதை நாம் மிகவும் அவதானமாக கவனித்தால் இவர்கள் Kன்பு விடுதலைப் போராட்டத்தை அழிக்க, பிhpக்க நாசமாக்க உதவிய அதே நபர்களாகவே காணப்படுகின்றனர். இது எப்படியாக நடை Kறைப்படுத்தப்படுகிறது என நாம் ஆராயுமிடத்து இவ் வெளிநாட்டு குழப்பங்களுக்கு உள்நாட்டிலிருந்து வருகைதரும் அரசின் கைக்கூலிகளான சில ஊடகவியலாளரும் தேர்தல்களில் தோல்வி கண்ட அரசியல்வாதிகளும் Kன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கisAம் நன்றாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.  

அப்பாவிகள்

 பல உண்மைகளை யதார்த்த hPதியில் அறியாத பல சங்கங்களின் பிரதிநிதிகள், சிலhpன் கபட நாடகங்களை நம்பி புலம்பெயர் வாழ்வில், தமது பெயர்களையும் கெடுத்து மற்றவர்களையும் பிழையான பாதையில் இட்டுச் செல்லுகின்றனர்.

இதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். 

முதலாவதாக, முள்ளிவாய்க்காலின் பின்னர் புலம்பெயல் திடீர் திடீரென பல புதிய அமைப்புகள் உதயமாவதற்கான காரணியை நாம் ஆராயுமிடத்து இதற்குள் முன்னைய குழப்பக்காரர்களின் யோசனைகள், ஆலோசனைகள் இருப்பதை நாம் காணுகின்றோம். 

அடுத்து பல சங்கங்கள் இணைந்து ஓர் வேலைத் திட்டத்தை Kன்னெடுக்க முடியாமல் சில ஆலோசனை கூறுபவர்களும், அதே நபர்களாகக் காணப்படுகிறார்கள். இதற்கு ஓர் நல்ல உதாரணமாக கடந்த கோடை காலத்தில் ஐரோப்பாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை நாம் கவனத்திற் கொள்ளலாம். 

ஒன்றை மட்டும் யாவரும் மனதில் கொள்ள வேண்டும். எமக்கு ஆலோசனை புத்திமதி கூறுபவர்கள் உண்மையில் முன்பு பலரின் நன்மதிப்பை பெற்றவர்களா? அப்படியில்லையானால் அதற்கான காரணங்களை நாம் அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் இக் குழப்பவாசிகள் தமது வழமையான குழப்பம் விளைவிக்கும் வேலைகளை முன்னெடுத்து யாவரையும் சின்னா பின்னமாக பிரித்து விடுவார்கள்.

சுயநிர்ணய உரிமை 

 

சமயக் கதையில் நாரதர் மாம்பழத்துடன் சென்றது போல் சில செல்வாக்கற்ற அரசியல்வாதிகள்சுயநிர்ணய hpமைஎன்ற சொற் பதத்தை தமது ஆயுதமாக பாவிக்கின்றனர். சுய நிர்ணய hpமை என்பது என்னவென்பதை தமிழ் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் கூட்டமைப்பினர் நன்கு அறிவார்கள்.

ஆகையால் இதுபற்றி செல்வாக்கற்ற அரசியல்வாதிகள் தாம் இதில் நிபுணத்துவம் பெற்றது போல் மற்றவர்களுக்கு நாடகம் ஆட வேண்டிய அவசியமில்லை. உண்மையில் இச் செல்வாக்கற்ற அரசியல்வாதிகள் அறியாதது என்னவெனில் சுயநிர்ணய உமையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று உள்வாhpயான சுயநிர்ணய hpமை (Internal self-determination) மற்றையது வெளிவாhpயான சுயநிர்ணய hpமை (external self-determination). ஒன்றை மட்டும் சுயநிர்ணய hpமை பற்றி பெhpதாக வீரம் பேசும் செல்வாக்கற்ற அரசியல்வாதிகளைக் கேட்க விரும்புகிறோம். தற்போதைய நிலையில் அதாவது, தமிழரிடையே ஒற்றுமையின்மை, பல அரசியல் கட்சிகள், சங்கங்கள் உள்ள நிலையில் Kஸ்லிம் மக்களின் பங்களிப்பும் கிடையாத நிலையில் நாம் வெளிவாhpயான சுயநிர்ணய உமையைப் பெறடியுமா? அப்படியானால் எந்த எந்த நாடுகள் இம் Kயற்சிக்கு ஊக்கமோ, உதவியாளிப்பார்கள் என்பதையும் தயவு செய்து வெளிப்படையாக மக்களுக்குக் கூறுங்கள்.

இங்கு ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். நாம்தனிநாடுதான் எமது Kடிவு என்ற இலட்சியத்தை கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், பாதைகளை அடைவதற்கு ஏற்ற Kறையில் நமது பெhpயேhர், வழி காட்டிகள், Kன்னோர் கூறியதைப் போன்று மாற்றிச் செல்வதே உண்மையான இராஜதந்திரம்.

சுயநிர்ணய hpமை பற்றி இறுதியாக கூறுவதhனால், தற்பொழுது உள்நாட்டில் ஈழத் தமிழர் வாழ்வில், உள்வாhp சுய நிர்ணய hpமையொன்றே சாத்வீகமானது. இதையே அயலவரும், சர்வதேச Kதாயம் ஆதhpக்கிறார்கள்.

Kன்பு நிலைமை வேறாக இருந்தது என்பதை Kழு உலகமே அறியும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் அதற்குhp கட்டமைப்புகளுடன் சர்வதேச அங்கீகாரம் மட்டும் அற்ற தனிநாடு ஒன்று நடைமுறையில் இருந்தது.

எமது புலம்பெயர் வாழ்க்கையில் எமது உடன்பிறவா சகோதர சகோதhpகளுக்கும் எமது தாய்மண்ணுக்கு செய்வதற்கு விசேடமாக Kள்ளிவாய்க்காலின் பின்னர் பல புதிய வேலைத் திட்டங்கள் உண்டு.

ஆகையால், சுயநிர்ணய hpமை, சுயநிர்ணய hpமை என்று கூறி தமிழருடைய ஒற்றுமையும், சர்வதேச ஆதரவையும் தயவுசெய்து குழப்பிவிடாதீர்கள்.

பல வேலைத்திட்டங்கள்  

 

இன்று புதிய புதிய சங்கங்கள் புதிய புதிய பிரமுகர்கள் புலம்பெயர் வாழ்வில் உதயமாவதை நிறுத்தKடியாது. காரணம். பலர் மற்றவர்களினால் ஏவப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். ஆகையால் புதிய சங்கங்கள், புதிய பிரKகர்கள் தமக்கென ஓர் புதிய வேலைத் திட்டத்தை தேர்ந்தெடுத்து செய்யும் பொழுது, இயற்கையாகவே மக்களின் ஆதரவையும் பெற்றுக் கொள்வார்கள். 

 

மற்றவர் ஏற்கெனவே செய்யும் வேலைகளுக்கு தமது %க்கை நுழைக்கும் பொழுது பிரச்சினைகள் உருவாவதுடன் இவர்கள் சந்தேகக்கண்களுடன் பார்க்கப்படுவார்கள். இதனால் சிங்கள அரசின் நோக்கத்தை திருப்திப்படுத்தும் மோதல்களும் ஏற்படுகின்றன.

எமது மக்கள், எமது இனம், எமது மொழி, எமது நிலம், எமது அரசியல் அபிலாஷைகளை நேசிக்கும் எந்த தமிழனும் தனது உடன்பிறவா சகோதர, சகோதhpகளுடன் இவ்விடயங்களில் ஒரு பொழுதும் Kரண்பட மாட்டார்கள்.

ச. வி. கிருபாகரன் 

 

நன்றி வீரகேசரி