சூனியம் செய்வது, புதையல் எடுப்பது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு புதிய விடயமல்ல. பகுத்தறிவுடன் பார்க்காமல் வெறுமனே கற்பனை உலகத்தை நிதர்சனமாகக் காண்பதற்கு கையாளும் காட்டு மிராண்டித்தனம் புதையுண்டு போகவில்லை. இது உண்மையா பொய்யா என்பதல்ல கட்டுரையின் நோக்கம்.

மெய்யானதாக இருப்பின், அந்த மெய்யை காண்பதற்கு மூட நம்பிக்கையுடன் கையாளும் முறையே பிரச்னையை தருகிறது. இவற்றிற்கு பின்னால் பெளத்த மத குருமார்களும், துறவிகளும் நிற்பதே வருத்தத்திற்குரியது. இவை இன்று நேற்று ஆரம்பித்த விடயமல்ல என்பதற்கு சான்றாக தமிழ்ப்பகுதிகளில் நடந்த இரு உண்மைச் சம்பவங்களை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்

* 1962 களில் திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூதூர்ப்பகுதியில் 3 ம் கட்டையில் ஒரு மலை உள்ளது. அது ஒரு பழம் இராஜதானி என்ற ஐதீகமும் உள்ளது. அந்த மலையில் பெரும் புதையலும், நினைத்த உருவத்தை அடையக்கூடிய மந்திரக்கோலும் இருப்பதாகவும், அதை அடைவதற்கு ஒரு குடும்பத்தின் தலைச்சன் ஆண் குழந்தையை பலிகொடுத்தால் அவற்றை அடையலாம் என அறிந்த மலையாளி ஒருவர் சந்நியாசி வேடமணிந்து, அப்பகுதியில் வசித்து வந்த 12 வயதுச் சிறுவனாகிய புஸ்பராஜாவை வாழைப்பழத்தைக் கொடுத்து மயக்கி மலையின் பலிபீடத்தை நோக்கி கூட்டிச்சென்றார். இதை கண்ணுற்ற அவரது நண்பர் கிளமன் அவர்கள் ஐயம் கொண்டு அவ்வழியால் சென்ற போலிஸ் வாகனத்தை நிறுத்தி தகவலை கூறியிருந்தார். அப்பொழுது மூதூர்ப்பகுதியில் தலைமைப் போலிஸ் அதிகாரியாக இருந்த ஆறுமுகம் அவர்களின் தலைமையில் போலிஸ் கோஸ்டி ஒன்று மலையேறி, பலிபீடத்தில் சந்நியாசியால் சிரச்சேதம் செய்ய ஆயத்த நிலையில் இருந்த புஸ்பராஜாவை காப்பாற்றினார்கள்(1985 ம் ஆண்டு காலப்பகுதியில் புஸ்பராஜா சிங்கள இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டார்

* 1983 ம் ஆண்டு காலப்பகுதியில் திருக்கோணமலை மாவட்டத்தின் வெருகல் பகுதியில் அமைந்துள்ள மலை நீலியம்மன் ஆலயத்தை சுற்றிவர அமைந்துள்ள மலையில் வரலாற்றுக்காலங்களிற்கப்பால் வடிவமைக்கப்பட்டிருந்த முதலை, சிங்கம் போன்ற சின்னங்களை இலங்கையின் சிங்களப்பிரதேசங்களில் இருந்து வந்த பெளத்த துறவிகளால் பலவந்தமாக வெடிவைத்து உடைத்து புதையல் தேடியதும் அதை தடுக்க முயன்ற அப்பகுதி இந்துக்கள் சிங்களக் காடையர்களால் அச்சுறுத்தப்பட்டது இன்றுவரை நினைவிலுள்ள சான்றுகள்

சிங்களவர்களைப் பொறுத்தவரையில்,

மண்ணாசை கொண்டாலும் தமிழனின் பூவீக மண்ணில்த்தான்!

பெண்ணாசை கொண்டாலும் தமிழிச்சி மீதுதான் காமம்!

பொன்னாசை கொண்டாலும் தமிழனின் பொன் பொருட்கள் மீதுதான்!

அதுபோல, மகிந்த ராஜபக்சவின் நீண்ட ஆயுளிற்கும், அரசாட்சிக்கும் தமிழ்ப் பெண்களின் இரத்தம் தான் தேவை. இது சிங்களவர்களின் பிறப்பிலிருந்து இரத்தத்தோடு ஊறிய விடயம்

மர்ம மனிதனின் இரத்தக் கொள்ளை! 

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் தமிழ்மக்கள் மீது ஏவப்பட்டுக்கொண்டிருக்கும் மிகப்பாரியளவிலான சிங்களத்தின் மேலாதிக்க வன்முறை இதுவாகும். ஒரு திருத்தம் யாதெனில், தற்பொழுது பீதியூட்டிக்கொண்டிருக்கும் மர்மமனிதனின் இரத்தக்கொள்ளை தமிழ்ப்பேசும் இனமாகிய முஸ்லீம் பெண்களிலும் குறிவைத்திருப்பதேயாகும்

திருக்கோணமலை பாலையூற்று கிராமத்தில் 4 வயது சிறுமி சாத்திரம் கூறுவதும், அவை உண்மையாக இருப்பதாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது. இதனை அறிந்த மஹிந்த கம்பனி அச் சிறுமியிடம் சாத்திரம் கேட்டிருந்தார்கள். அந்த சிறுமியும் ஜனாதிபதி மகிந்தாவின் ஆயுட்காலம் மிகவும் சொற்பமெனவும், அது மிக விரைவில் முடிந்து விடுமெனவும் அவர் இரத்தம் கக்கியேதான் இறப்பாரெனவும் எதிர்வு கூறியிருந்தார். அதற்கான பரிகாரமாக மூவாயிரத்தியொரு பெண்களின் இரத்தம் தேவைப்படுமெனவும் அதனூடாக மேற்கொள்ளப்படும் பலி பூஜையினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்டிருக்கும் இடர் நிவர்த்தி செய்யப்படும் என ஒரு பெளத்த துறவி ஆரூடம் கூறியதற்கமைய மர்மமனிதனால் இரத்தக்கொள்ளை நடைபெறுகின்றது

பதுளையில் தொடங்கிய இந்த இரத்தக்கொள்ளை மகியங்கனை, வாழைச்சேனை, பொத்துவில், ஊறணி, உல்லை, திருக்கோணமலை, கொழும்பு வரை வந்து நிற்கிறது. இம்மாதம் ஒன்பதாம் திகதி வாழைச்சேனையில் இரத்தமெடுக்க முயன்ற மர்மமனிதன் பொதுமக்களால் துரத்தப்பட்டு இராணுவ முகாமுக்குள் ஓடிச்சென்று பதுங்கிக் கொண்டான். இதேபோல் இம்மாதம் பன்னிரெண்டாம் திகதி உல்லையில் நடந்த சம்பவத்தில் மர்மமனிதன் தென்னை மரத்தில் இருந்ததைக்கண்ட பொதுமக்கள் தாக்க முயன்ற போது அவன் இராணுவபோலீசால் காப்பாற்றப்பட்டதோடு அவன் யானைகளின் கணக்கெடுப்புக்காக தென்னையில் இருந்ததாகவும் காரணம் கூறப்பட்டது. அன்றைய தினம் கல்முனைக்குடியில் நடமாடிய மர்மமனிதர்களை பிடித்த பொதுமக்கள், அவர்களை பள்ளிவாசலில் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களை மீட்பதற்காக போலீசார் வந்தும் அவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க பொதுமக்கள் மறுத்து விட்டார்கள்

உல்லையில் நடந்த சம்பவத்தில் இந்த மர்மமனிதர்களிடமிருந்து தங்கள் பெண்களைக் காப்பாற்றுவதற்காக பொதுமக்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை இராணுவம் பலவந்தமாக தடுத்து நிறுத்தியதோடு மர்மமனிதர்களை இராணுவமே தங்கள் வாகனத்தில் ஆங்காங்கே கொண்டுவிடுவதையும் பொதுமக்கள் அவதானித்துள்ளனர்

முற்றுமுழுதாக தமிழ்ப்பேசும் கிராமமாக இருக்ககூடிய உல்லை பிரதேசத்தில் யானைக் கணக்கெடுப்பிற்காக ஒரு சிங்களவர் ஒருவர் அந்த நடுநிசியில் தென்னைமரத்தில் ஏறியிருக்க வேண்டியதன் நோக்கமென்ன

இந்த மர்மமனிதர்களின் நடமாட்டத்திற்கு இராணுவம் மெளனமாக இருப்பது அல்லது துணைபோவதன் காரணமென்ன

உலகத்திலே மிகப்பெரிய தீவிரவாதத்தை அழித்த ஆற்றல் மிக்க இராணுவமென உலக நாடுகளுக்கு புகழ்ந்து தள்ளும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு இதற்கு என்ன பதில் கூறுகின்றது. தமிழர்களை அழிப்பது, அப்பாவிப் பெண்களை கற்பழிப்பது, சிறுவர்களை கொலை செய்வது, தமிழ் இளையோருக்கு ஆபாசப்படங்கள் காட்டுவது போன்றவையா இராணுவத்தின் மிகப்பெரிய சாதனைகள்

இதிலிருந்து புரிதலுக்குரிய விடயம் யாதெனில்

* உல்லை சம்பவத்தில் யானைக் கணக்கெடுப்பிற்கு அந்த மர்மமனிதன் அரசால் நியமிக்கப்பட்டவராயின் அதற்கான அத்தாட்சிகளை அவர் வைத்திருந்திருக்க வேண்டுமல்லவா? அல்லது அவரின் பணிசம்பந்தமாக முதலில் அப்பகுதி கிராம உத்தியோகத்தருக்கு முற்கூட்டியே அறிவிக்கவேண்டுமென்பது சட்டமுமல்லவா? இவை எதுவுமே நடைபெறவில்லை. இலங்கை அரசின் சட்டங்கள் கூட தமிழ்ப்பேசும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லையென்பதுதான் உண்மை. தேவைக்கேற்ப சட்டங்களை மாற்றி தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு தன்னிட்சையாக சிங்களத்திற்கு ஜனநாயகம் மீறிய உரிமை உள்ளதென்பதை அனைவரும் புரிந்துகொள்ளல் அவசியம்

* சிங்களத்தின் தேவைக்கு தமிழ்ப்பேசும் இனம் பலியாவது குறிப்பிடத்தக்கது. அனைத்து வடிவிலான அராஜகங்களை சிங்களம் பிரயோகிக்க தெரிவுசெய்யும் களம் முற்றுமுழுதாக தமிழ்ப்பேசும் இனங்கள் வாழும் பிரதேசங்களாகவே இருக்கின்றது. கால்துடைக்கும் துடைப்பமாக தமிழ்ப்பேசும் இனம் சிங்களத்தால் பாவிக்கப்பட்டு வருவது இன்று நேற்றல்ல. இதிலிருந்து விளங்குவது இலங்கையிலே சிங்களமும் தமிழும் இரண்டு வேறுபட்ட கலாசாரம் கொண்ட இனங்கள் என்பதுதான். ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து வாழ்வதற்குரிய சாத்தியமற்றவை. அடிமைப்படுத்தி வாழ நினைக்கும் சமூகமும், அடிமைப்பட்டு வாழ மறுக்கும் சமூகமும் சரிசமமாக ஒன்றுசேர்ந்து வாழ முடியாது. 

* இன்று தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையை சாதகமாக்கிக்கொள்வது மிகப்பெரிய தேவையாகும். குறிப்பாக இலங்கை முஸ்லீம்காங்கிராஸ் கட்சியின் அங்கத்தவர்கள் மிக ஆழமாக நோக்கவேண்டும். தொடர்ந்து சுயநல அரசியலுக்குள் மூழ்கிக்கிடவாமல் தமிழ்ப்பேசும் மக்களின் அங்கமாக இருக்கும் முஸ்லீம் மக்களின் எதிர்கால நிலையை உணர்தல் அவசியம். சிங்களத்தைப் பொறுத்தவரையில் அதன் உயர்வுக்கு படிக்கல்லாக அமைப்பதற்கு தமிழ்ப்பேசும் மக்களின் முதுகையே பாவிப்பார்கள் என்பது காலங்கள் கூறும் மறுக்கமுடியாத உண்மை

எனவே, இலங்கைத்தீவிலே எந்தவொரு அரசு ஆட்சிசெய்தாலும் சிங்கள மக்களின் பேராதரவுடன் தான் இயலுமானதாகும். அதுவே தமிழ்மக்களுக்கு எதிரான செயற்பாட்டை எந்த அரசு அதிகமாக கைக்கொள்ளுதோ அதுவே ஆட்சிபீடமேறும். இதனால், இலங்கைத்தீவிலே ஜனநாயக வழியில் தமிழ்ப்பேசும் மக்களுக்கான நிரந்தரத்தீர்வை எட்டமுடியாதெனலாம். ஜனநாயக வரம்புக்குள்ளே நின்று ஜனநாயக ஓட்டைகளை அறிந்து சிங்களத்திற்கு எதிரான மேலாண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வருவதற்கு வெளிநாட்டு நடுநிலைமை பேணும் அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இன்றைய நிலையில் சிங்களத்தின் அராஜகப் போக்குகள் தமிழ்ப்பேசும் இனத்திற்கு சாதகமாக அமைவதைக் காணலாம். ‘காலத்தே பயிர் செய்வதைப்போல இந்த காலத்தை நழுவவிடலாகாது. தமிழ்ப்பேசும் இனம் உடனடியாக வீதிகளுக்கு இறங்கி ஒரு தலைப்பட்சமாக சிங்களம் செய்யும் அராஜகத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராட முன்வர வேண்டும். இதற்கான முன்னெடுப்புக்களை முஸ்லீம் தமிழ் அமைப்புக்கள் பேதங்களைக் கடந்து ஏற்படுத்தல் அவசியம். மேலும் இந்த நிலையை விரைவாக வெளிக்கொண்டுவர தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இலங்கை முஸ்லீம் காங்கிரசின் இணைந்த பணியும் மிக மிக தேவையானது

-மல்லிகையூரான்-

**தயவுசெய்து இக்கட்டுரையை முழுமையாகவோ அல்லது அதன் சாராம்சத்தையோ உங்கள் வசதிக்கேற்றவாறு உங்கள் நாட்டின் பிரதான மொழிகளில் மொழிமாற்றம் செய்து அங்குள்ள ஊடகங்களுக்கும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும். இன்றைய காலநிலையில் ஒவ்வொரு தமிழனுக்குமுள்ள தார்மீக சமூக கடமையென எண்ணி சிரமம் பாராது வெளிக்கொண்டு வரவேண்டுமென உங்கள் ‘தணல்’ இணையம் வேண்டி நிற்கிறது.**